ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - திருமாவளவன் ரியாக்ஷன் என்ன ?
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என பல அறிவிப்புகள் வந்துள்ளன. இதனை தமிழக அரசு தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் - திருமாவளவன்
விழுப்புரம்: யு ஜி சி விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்தவர்களை நியமிக்க மத்திய அரசு சதி திட்டம் தீட்டுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் செயல்படும் தனியார் கல்லூரியில் செஞ்சி தமிழ்ச்சங்கம் சங்கம் சார்பில் 13 வது ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், ஆங்கிலம் தெரியாது என தமிழர்கள் கருதுவது குறைபாடாக நினைப்பதாகவும் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழர்கள்தான் தாய்மொழியில் பேசுவதை குறைபாடாக கருதுவதாக வருத்தம் தெரிவித்தார். இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என தாய்மொழி கொண்டவர்கள் தங்களின் தாய்மொழியில்தான் பேசுவதாகவும், எந்த சூழலிலும் பிறந்த மண்ணையும் தாய் மொழியையும் மறந்து விடாக் கூடாது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்காண மொழிகளை மக்கள் பேசினார்கள் அதில் பல அழிந்துள்ளன.
சமஸ்கிருதம் பேசியவர்கள் எல்லாம் இந்தி, உருது அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தின் பிராந்திய மொழியை தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை என்றால் இன்று அனைவரும் இந்தி பேசி கொண்டு இருந்திருபோம் என கூறினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த திருமாவளவன்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம், ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார். தொடர்ந்து, யுஜிசி விதிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாகவும் கல்வி தகுதி ஒரு பொருட்டல்ல தலைமைத்துவமும் நிர்வாகமும் இருந்தால் போதும் என அறிவித்துள்ளார்கள். இதன் மூலம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சர்ந்தவர்களை நியமிக்க மத்திய அரசு சதி திட்டம் தீட்டுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். யுஜிசி விதிகளில் மாற்றம் செய்வது
சனாதன சதி என்று கருதுவதாகவும் இந்திய அளவில் இண்டியா கூட்டணியை சார்ந்த தலைவர்கள் ஒருங்கினைத்து திரும்ப பெறும்வரை இதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என பல அறிவிப்புகள் வந்துள்ளன. இதனை தமிழக அரசு தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.