மேலும் அறிய

Scholarship: படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்... எப்படி தெரியுமா...?

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்.

விழுப்புரம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.10.2024 அன்று தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.

உதவித்தொகை பெற கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு (தோல்வி). பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2024 அன்றைய தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசாணை (நிலை) எண். 127, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ஆர்2) துறை நாள் 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம்

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவு

மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. 01.10.2024 உடன் தொடங்கிய காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2024 நவம்பர் 30-ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். 

வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை சிறப்பு நேர்வாக மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி  தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget