ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்: டோக்கன் முறையில் சீராக வழங்க ஏற்பாடு!
விழுப்புரம் மாவட்டத்தில் 982 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 246 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் 26 சுய உதவிக்குழு நியாயவிலைக்கடைகளும் ஆக மொத்தம் 1254 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

விழுப்புரம்: கையூர் ஒன்றியம் முகையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் எம்எல்ஏ பொன்முடி ஆகியோர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் முகையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி ஆகியோர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2026 பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சைஅரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு ரூ.3000/-ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை வழங்க உத்தரவிட்டிருந்தார்கள்.
அதன்படி, இன்றையதினம் முகையூர் ஒன்றியம் முகையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 982 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 246 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் 26 சுய உதவிக்குழு நியாயவிலைக்கடைகளும் ஆக மொத்தம் 1254 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 6,28,774 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்ளும், 429 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களும் உள்ளன. ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கபணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன், ரூ.3000/- ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
இந்த, பரிசுத்தொகுப்பில் 1 கிலோ பச்சைஅரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, வேட்டி, சேலை ஆகிய பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 3,000/- ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்களை வரும் 13-ஆம் தேதி வரை, ஞாயிற்றுக் கிழமையிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், குடும்ப அட்டைதார்களுக்கு ஊழியர்கள் டோக்கன்களை வழங்கி வருகிறார்கள்.
டோக்கன்களில் மக்கள் ரேஷன் கடைகளுக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். குறித்த நேரத்தில் சென்று பரிசுப்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிசு தொகுப்புகள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயுள்ளத்தை காட்டுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாளாக சாதி, மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் திருவிழா இந்த பொங்கல் திருநாளாகும். எனவே தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பரிசுத் தொகுப்பை வழங்கி பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் 2 கோடியே 12 இலட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 6,28,774 (ஆறு இலட்சத்து இருபத்து எட்டாயிரத்து எழுநூற்று எழுபத்து நான்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 429 குடும்பங்களுக்கும் இந்த பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,14,953 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.





















