மேலும் அறிய
Advertisement
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசி போராட்டம் - அகதிகளாக அறிவிக்க கோரிக்கை
மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும் , இல்லையெனில் சொந்த நாட்டிலேயே தாங்கள் அகதிகளாக அறிவித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, இதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டமும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
மேலும் தங்கள் குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இருக்கும் புகார் மனு பெட்டியில் போடுமாறு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கடந்த சில வாரங்களாக புகார் பேட்டியல் மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கோட்டகம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கிராமத்தினை திடீரென்று நீர் நிலை ஆக்கிரமிப்பு என கூறி உடனடியாக வெளியேற சொல்வதாக கூறுவதாக மனு அளிக்க வந்தனர்.
அப்பொழுது சில குறைந்த அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காவல்துறை சார்பில் தெரிவித்த போதும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் திடீரென தங்களை அகதிகளாக அறிவிக்க கோரி தாங்கள் வைத்து இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறும் பொழுது, கடலூர் மாவட்டம் கோட்டகம் ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. மேலும் இந்த ஏரியின் ஒதுக்கு புறமாக சுமார் 70 ஆண்டுகளாக வீடுகள் கட்டி 27 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
இந்த நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள கிராமத்திற்கும் எந்த வித பாதிப்பும் இல்லாத காரணத்தாலும், அரசு கட்டிடங்கள், கிராம சாலைகள், தேசிய ஊரக நெடுஞ்சாலை அந்த வழியாக செல்வதாலும் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் எந்த வித கருத்து கேட்காமலும், ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் கருத்துகளை கேட்கமாலும் ஒரு தனிநபர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் சொந்த நாட்டிலேயே தாங்கள் அகதிகளாக அறிவித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion