'ஏழ்மை காலத்தில் தன்னுடன் இருந்த தந்தை பதவி உயர்வு பெற்று செல்லும் போது இல்லை' - கண்கலங்கிய ஆட்சியர்
ஏழ்மை காலத்தில் தன்னுடன் இருந்த தந்தை பதவி உயர்வு பெற்று செல்லும் போது இல்லையே என கண்கலங்கிய ஆட்சியர் மோகன்
விழுப்புரம்: ஏழ்மை காலத்தில் தன்னுடன் இருந்த தந்தை பதவி உயர்வு பெற்று செல்லும் போது இல்லையே என அரசு அதிகாரிகளுடான பிரிவு உபசார விழாவில் விழுப்புரம் ஆட்சியர் மோகன் அழுததை எம்எல்ஏ புகழேந்தி தேற்றிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக கடந்த 19 மாதங்கள் மோகன் பணியாற்றி வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பதவி உயர்வு பெற்று செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் ஆட்சியர் மோகன் அரசு அதிகாரிகளுடனான பிரிவு உபச்சார விழா ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.
அப்போது கடந்த விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஏழ்மையான நிலையில் இருந்தபோது தன்னுடன் இருந்த தகப்பனார் தற்போது பதவி உயர்வு பெற்று செல்லும் போது தன்னுடன் இல்லை என கூட்டத்தில் பேசிகொண்டே தேம்பி அழுத சம்பவம் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதனையடுத்து அருகிலுள்ள திமுக எம்எல்ஏ புகழேந்தி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆட்சியருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் மோகன் விடைபெற்று சென்று செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
இன்று தலைமைச் செயலகத்தில், திரு.த.மோகன், இ.ஆ.ப., அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/hOb8InYjyu
— TN DIPR (@TNDIPRNEWS) February 5, 2023
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்