மேலும் அறிய

விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்றால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் - காவல் துறை எச்சரிக்கை

ழுப்புரம்- வளவனூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து அதிவேகமாக வந்த 40 தனியார் பேருந்துகளை நிறுத்தி அதன் டிரைவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.

விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்றால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி வேகமாக சொல்கிறது. குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வரை உள்ள 10 கிலோ மீட்டர் சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலியனூரில் தனியார் பஸ் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து அந்த பஸ் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அதிவேகமாக தனியார் பஸ்கள் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் துணை காவல்  கண்காணிப்பாளர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், வசந்த் மற்றும் போலீசார், விழுப்புரம் ராகவன் பேட்டை பகுதியில் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விழுப்புரம்- கடலூர், விழுப்புரம்- புதுச்சேரி, புதுச்சேரி- விழுப்புரம், விழுப்புரம்- வளவனூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து அதிவேகமாக வந்த 40 தனியார் பேருந்துகளை நிறுத்தி அதன் டிரைவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர். மேலும் அந்த டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே தனியார் பேருந்துகள் அனைத்தும் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்றால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Embed widget