Power Shutdown: திருவண்ணாமலையில் நாளை, நாளை மறுநாள் எந்தெந்த பகுதியில் மின்நிறுத்தம் - லிஸ்ட் இதோ..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு கோட்டத்தில் 65 இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து செயற்பொறியாளர் ராஜஸ்ரீ விடுத்துள்ள செய்தி குறிப்பில் தண்டராம்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் தண்டராம்பட்டு மற்றும் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் இதே போன்று தென்முடியனூர் ஆகிய ஊர்களும் தானிப்பாடி, சாத்தனூர் , கொட்டையூர், மலையனூர் செக்கடி மற்றும் பெருங்களத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்தில் 65 இடங்களில் வருகிற 29ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட துணை மின் நிலைய மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. அதனால் கீழ்க்கண்ட 65 பகுதிகளில் நாளை மறுநாள் 29ம்தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராஜஸ்ரீ அறிவித்துள்ளார். இதன்படி கீழ்நாத்தூர் ரோடு, பெருமாள் நகர்,திண்டிவனம் ரோடு,சகாயநகர்,ஏந்தல், பள்ளிகொண்டாப்பட்டு , நல்லான்பிள்ளைபெற்றாள், தென்றல் நகர்,மின்நகர், மாந்தோப்பு,எல்ஜிஜிஎஸ்நகர், துர்க்கை அம்மன் கோவில் தெரு , புது வாணியம் குளத்தெரு , பே கோபுர தெரு, ஊத்துக்கோட்டை தெருவிலும் மின்தடை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி ஆட்டோ விபத்துக்கு காரணம் இதுதான்... பள்ளி சென்ற முதல் நாளே குழந்தை இறந்த சோகம்...!
மேலும், அடி அண்ணாமலை, கோட்டங்கள், அத்தியந்தல், அய்யம்பாளையம், அசுவானகசுரனை, அகரம் , களஸ்தாம்பாடி,சாணானந்தல், நூக்காம்பாடி, நார்த்தாம்பூண்டி, முத்தரசம்பூண்டி, தென்னகரகம், நெல்லிமேடு, சீலப்பந்தல், கருத்துவாம்பாடி, புதுமல்லவாடி, மெய்யூர்,நாச்சந்தல், பெருந்துறைப்பட்டு, பறையம்பட்டு, எடக்கல், அத்திப்பாடி,மேலானந்தல், கண்டியாங்குப்பம், சின்னபாலியப்பட்டு, எஸ்கேபி பொறியியல் கல்லூரி, பாத் பள்ளிக்கூடம், அதனைத் தொடர்ந்து சாத்தனூர், மல்லிக்காபுரம், வேடங்குளம், புளியங்குளம், அட்டம் பாளையம், சாத்தனூர் அணை, மலையனூர் செக்கிடி ரெட்டியாபாளையம், மேல் பாச்சார், கீழ் பாச்சார், பெருங்குளத்தூர் , இளையாங்கன்னி, கோவிந்தராஜபுரம் , கிருஷ்ணா நகர், எம் ஜி ஆர் நகர், அயோத்தி நகர், தானிப்பாடி, நெறிஞ்சிப்பாடி, நாராயண குப்பம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வருகிற 29ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்