மேலும் அறிய

School leave : தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவளித்துள்ளார்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. தற்போதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல, வேலூர் மாவட்டத்திலும் மழை நீடித்து வருவதால் அந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இதுவரை வடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

School leave : தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 திருவண்ணாமலை மாவட்டம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது இந்நிலையில் நேற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில தாலுக்கா பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். கனமழை பெறும் மாவட்டங்கள்: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர்- 2) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சென்னையில் கன மழை வாய்ப்பில்லை என, மதியம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் 32.2 சென்டிமீட்டர் மழை, செய்யார் பகுதியில் 68 , ஜமுனா மரத்தூர் 11, வந்தவாசி 69.80 , போளூர் 17.20, திருவண்ணாமலை 9.20, தண்டராம்பட்டு 8.0 , கலசப்பாக்கம் 18, சேத்துப்பட்டு 46.80, கீழ்பெண்ணாத்தூர் 18.60, வெண்பாக்கம் 26 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் தமிழக கடற்கரைப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு காற்றானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

தலைப்பு செய்திகள்

CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget