மேலும் அறிய

அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டத்திலேயே திமுக தொண்டர் மரணம்...!

சவுந்தரை அங்கிருந்த நிர்வாகிகள் மீட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றநிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்

தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மயங்கிவிழுந்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் மறைந்த திமுக நிர்வாகிக்கு , அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல கட்சி நிர்வாகிகள்  , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பக்காலப்பல்லி கிராமத்தில் பேரணாம்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தமிழ் நாடு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் . காந்தி , சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமலு, வில்வநாதன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு ஆலசோனை நடத்தினர்.

அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டத்திலேயே திமுக தொண்டர் மரணம்...!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமம் எம்.ஜி.ஆர் . நகரைச் சேர்ந்த தி.மு.க. கிளை பிரதிநிதி சவுந்தர் (50) என்பவரும் கலந்துகொண்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சவுந்தர் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

சிறிது  கூட்ட நெரிசலுடன் காணப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் அவரை அவர் அமர்ந்திருந்த இருக்கையோடு வெளியில் தூக்கிச் சென்று  அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து முதலுதவி அளிக்க முயற்சி செய்தனர். எனினும் அவரிடமிருந்து எந்த அசைவும் காணப்படாமல் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள் அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சௌந்தரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர் . இதனால்  அதிர்ச்சியில் ஆழ்ந்த திமுக கட்சி நிர்வாகிகள் அவரது குடும்பத்தார்க்குத் தகவல் தெரிவித்துவிட்டு , சௌந்தரின் இறந்த உடலை அவரது வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.

அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டத்திலேயே திமுக தொண்டர் மரணம்...!

இச்சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் காந்தி, மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனடியாக இறந்த சவுந்தர் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மனைவி சுமதி, மகள் செண்பகத்திற்கு ஆறுதல் கூறினர்.

அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அமலு, வில்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், ஆகியோர் உடனிருந்தனர். ஆலசோனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த திமுக கட்சி தொண்டர் , ஆலசோனை கூட்டத்திலே உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சோகத்தையும் , அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : வேலூர் : சி.எம்.சி மருத்துவமனையில் தொடங்கியது தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆய்வு செய்யும் பணி..!

வேலூர் மாவட்ட செய்திகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் !!!

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget