மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! திருச்சி வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம், பயணத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள்

திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்:76820)  நேற்று புதன்கிழமை முதல் வரும் 23-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டும் இயங்கும்.

திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களின் பயணங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

தெற்கு ரெயில்வேயின் திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்:76820)  நேற்று புதன்கிழமை முதல் வரும் 23-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டும் இயங்கும். எனவே பயணிகள் இதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதேபோல் காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (எண்:76819) நேற்று (புதன்கிழமை) முதல் வரும் 23-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். காரைக்காலில் இருந்து புறப்படாது.

திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) திருச்சியில் இருந்து வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பதிலாக 12.45 மணிக்கு புறப்படும். குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) வரும் 20-ந் தேதி தகுந்த இடங்களில் 30 நிமிடம் நின்று தாமதமாக செல்லும்.

திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16849) வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டும் இயங்கும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16850) வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.

மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16847) வருகிற 17 மற்றும் 20-ந் தேதிகளில் மாற்றுப்பாதையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் சென்று செங்கோட்டைக்கு செல்லும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி வழியாக செல்லாது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைசெல்லும் ரெயில் 16-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி, 20-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு வந்து செல்லும்.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget