மேலும் அறிய

வாகன புகை சரிபார்ப்பு மையங்களுக்கு அதிரடி சீல் வைக்கப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மாநிலம் முழுவதிலும் 534 வாகனப் புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றது. அரசு விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகின்றது. அதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகனப் புகை பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்த வாகனப் புகை பரிசோதனை மையங்களில் ஒரு சிலவற்றில் வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்யப்பட்டும், ஒரு சிலவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்யும் நபர் இல்லாமல் மற்றும் உரிய முறையில் சோதனை செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து கடந்த 13.04.2024 (சனிக்கிழமை) அன்று மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், துணைப் போக்குவரத்து ஆணையர்கள் மற்றும் இணைப் போக்குவரத்து ஆணையர்கள் அனைவராலும் திடீர் தணிக்கை செய்யப்பட்டது.இந்த திடீர் தணிக்கையில் 50 புகை பரிசோதனை மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இல்லாமல் வேறு நபர் பணியிலிருந்து உரிமம் வழங்கப்பட்ட இடத்திலில்லாமல் வேறு இடத்தில் இயங்கியது, கேமரா பொருத்தப்படாதது.

 கட்டணம் விகித விவரம் அடங்கிய அட்டவணையை வைக்காமல் இருந்தது. உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்தது. Calibration Certificate இல்லாமல் இருந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த மையங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.இந்த வாகனப் புகைப் பரிசோதனை மையங்களில் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது PUCC 2.0 Version அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாகன புகை சரிபார்ப்பு மையங்களுக்கு அதிரடி சீல் வைக்கப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இந்த புதிய PUCC 2.0 Version-ல் கீழ்க்கண்ட முக்கியமான அம்சங்கள் உள்ளன.

1. அந்தந்த வாகனப் புகைப் பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட அலைபேசி உரிமத்தால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில் இந்த PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயக்க வேண்டும்.

2. இந்த புதிய Version GPS வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகனப் புகைப் பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும்.

3. இதன் மூலம் வாகனப் புகைப் பரிசோதனை செய்யும் போது இரண்டு புகைப்படங்களை (ஒன்று வாகனத்தை பதிவெண்ணை தெளிவாக காட்டும்படியும் மற்றொன்று வாகனத்தின் பதிவெண், புகைப் பரிசோதனை மையத்தின் பெயர் பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒருசேர இருக்குமாறு) எடுக்கப்பட வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை மூன்றையும் (இரண்டு திருச்சி புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ) பதிவேற்றம் செய்யாமல் இந்த செயலியை பயன்படுத்த இயலாது. இவை பதிவேற்றம் செய்யப்பட்டால்தான் புகைப் பரிசோதனை சான்றிதழ்தனை பதிவிறக்கம் செய்யவோ அல்லது Print எடுக்கவோ இயலும்.

4. அதைப் போல சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகைப் பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு (GPS enabled Photo with Latitude, Longitude) இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகைப் பரிசோதனையை இனி செய்ய இயலாது.


வாகன புகை சரிபார்ப்பு மையங்களுக்கு அதிரடி சீல் வைக்கப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

5. மேலும் புகைப் பரிசோதனை மையங்கள் தாங்களாக பயன்படுத்தும் மென்பொருளை இந்த PUCC 2.0 Version செயலியை இனி பயன்படுத்த முடியாது. மாறாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியை பொருத்தினால் மட்டுமே இந்த செயலி செயல்படும்.

இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை 06.05.2024 (திங்கட்கிழமை) முதல் அறிமுக்ப்படுத்தப்படுகிறது.இந்த புதிய PUCC 2.0 Version குறித்த செயல்முறை விளக்கத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மைய சோதனையாளர் மற்றும் உரிமைதாரர் ஆகியோருக்கு 03.05.2024 வெள்ளிக்கிழமை அன்று திருச்சி (மேற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வழங்கினர்.இதனைத் தொடர்ந்து இந்த புதிய PUCC 2.0 Version -ஐ வரும் திங்கள் கிழமை (06.05.2024) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி அதன் மூலம் மட்டுமே வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்ய தவறும் வாகனப் புகைப் பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget