மேலும் அறிய

திருச்சி அருகே எம்.ஜி.ஆர். சிலை சேதம் - அதிமுக சாலைமறியலால் பரபரப்பு

திருச்சி அருகே எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்தும், இடுப்பு பகுதியில் சேதப்படுத்தியும் உள்ளனர். நேற்று அந்த வழியாக சென்ற அ.தி.மு.க.வினர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்பட மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெட்டிமாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் புள்ளம்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


திருச்சி அருகே எம்.ஜி.ஆர். சிலை சேதம் - அதிமுக சாலைமறியலால் பரபரப்பு

மேலும், பேச்சுவார்த்தையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trichy Power Cut: திருச்சியில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் நிறுத்தம்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் நிறுத்தம்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வருண பகவான் காட்டிய கருணை... செழித்து வளர்ந்த பொங்கல் கரும்பு: விலை உயருமா என  எதிர்பார்ப்பு
வருண பகவான் காட்டிய கருணை... செழித்து வளர்ந்த பொங்கல் கரும்பு: விலை உயருமா என  எதிர்பார்ப்பு
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
9 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நம்பெருமாள் – வரும் நவ 5-ல் தீர்த்தவாரியுடன் நிறைவு
9 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நம்பெருமாள் – வரும் நவ 5-ல் தீர்த்தவாரியுடன் நிறைவு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget