மேலும் அறிய

Sri rangam Temple: வரும் 6ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பங்குனி தேரோட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து  அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது.  சிறப்பு பூஜைகளுடன் காலை 5.45 மணிக்கு மீனலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு  யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

மேலும் விழாவின் 2-ம் நாளான 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு  மாலை 5.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி 30-ந் தேதி காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தானமண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர்  அங்கிருந்து மாலை 5 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

Sri rangam Temple: வரும் 6ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்  பங்குனி  தேரோட்டம்

இதனை தொடர்ந்து 31-ந்தேதி தங்க கருடவாகனத்திலும், 1-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். மேலும் பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வரும் 2-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையைக் கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை காட்சியளிப்பார். 3-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சி விகையில் புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 4-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனிதேர்) அருகே இரவு 7.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார். தொடர்ந்து 5-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நம்பெருமாள் -ஸ்ரீரெங்கநாச்சித்தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. நம்பெருமாள்–ரெங்கநாயகித்தாயார் சேர்த்திசேவை  5-ந் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் நடைபெறும். முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறும்.

Sri rangam Temple: வரும் 6ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்  பங்குனி  தேரோட்டம்

மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்சியான பங்குனி  தேரோட்டம் வரும் 6-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.  7-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்புSalem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Embed widget