மேலும் அறிய

சேது சமுத்திரத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் - கி. வீரமணி

சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும்.

தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.வின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நெடுஞ்சாலை காட்டூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தி.க.தலைவர் வீரமணி, தி.மு.க. முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி கூறியதாவது...  தற்போதைய தி.மு.க. அரசு பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. குறிப்பாக பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நிறைவேற்றி பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியது இந்த அரசு. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் நிறைவேற்றி வருகிறது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முயற்சி செய்தார். அதற்கு அனுமதியும் பெற்று பணிகள் தொடங்கியது. அப்பொழுது சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா போன்றோர் அந்த இடத்தில் ராமர் கட்டிய பாலம் உள்ளது எனக்கூறி அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். அதனால் அது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சேது சமுத்திர திட்டப் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும். இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.


சேது சமுத்திரத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் - கி. வீரமணி

மேலும்  தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் சார்பில் வைக்கிறோம். சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும். இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது. பெரியாரின் நினைவு நாளில் சேது சமுத்திர திட்டத்தை தொடங்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

குப்பை மேடு போச்சு... செல்பி ஸ்பாட் வந்தாச்சு! திருச்சியில் அசத்தும் மாநகராட்சி
குப்பை மேடு போச்சு... செல்பி ஸ்பாட் வந்தாச்சு! திருச்சியில் அசத்தும் மாநகராட்சி
Trichy power cut: திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget