மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23 ஆயிரத்து 53 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பட்டியலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி பெற்றுக் கொண்டார். அதன்பின் கலெக்டர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில், 6 லட்சத்து 62 ஆயிரத்து 655 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 79 ஆயிரத்து 306 பெண் வாக்காளர்களும், 66 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 பேர் இடம்பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் கடந்த 9.11.2022 முதல் 8.12.2022 வரை நடைபெற்ற 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது 11 ஆயிரத்து 465 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 25 ஆயிரத்து 4 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள்

மேலும் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 9 ஆயிரத்து 934 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 111 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 23 ஆயிரத்து 53 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-ன்போது 18,869 இளம் வாக்காளர்கள் (18-19 வயதுடையவர்கள்) வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget