மேலும் அறிய

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பாட்னாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் காளிமுத்து (வயது 32). அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் பழனியப்பன் (28). இருவரும் திருச்சியில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இருவரும் பாட்னாப்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கட்டிடவேலைக்காக திருச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை காளிமுத்து ஓட்டி செல்ல பின்னால் பழனியப்பன் அமர்ந்து இருந்தார். அவர்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தனர். இதனிடையே புதுக்கோட்டை சிப்காட் அருகே வெள்ளனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலாஜி (35) என்பவர் நாகமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது அண்ணன் கணேசன் மகள்களான 11-ம் வகுப்பு மாணவி முத்தழகி (16), 7-ம் வகுப்பு மாணவி கஸ்தூரி (12) ஆகியோரை அழைத்து கொண்டு பள்ளியில் விட மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் காந்தி நகரிலிருந்து திருச்சி-மதுரை சாலையில் ஒரு வழி பாதையில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பாலாஜி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும், காளிமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மேலும் இதில் 2 மோட்டார் சைக்கிளிலும் சென்ற 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் சாலையில் கிடந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலாஜி, காளிமுத்து ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி மாணவிகள் முத்தழகி, கஸ்தூரி மற்றும் பழனியப்பன் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget