மேலும் அறிய

திருச்சி: ஜீயபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - 9 பேர் கைது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே முக்கிய நபரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம்,  ஜீயபுரம் அருகே உள்ள குழுமணி கிராமத்தில் கடந்த  31 ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு அன்று இரவில் கேக் வெட்டும்போது, இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் மறுநாள் இரவு சுக்கான் குழி பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு சிலர் சத்தம் போட்டு கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி காத்தான் மற்றும் சிலர் வீட்டில் இருந்து வெளியே வந்து என்ன பிரச்னை என்று கேட்டுள்ளனர். அப்போது, சிலர் கற்கள் மற்றும் கட்டையால் அவர்களை தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காத்தான், கருப்பன், ராஜலிங்கம், விஜயலட்சுமி, பாப்பாத்தி, அருண் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த மோதலில் மற்றொரு தரப்பை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்  காலையில் சுக்கான்குழி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் ஈடுபட்ட முக்கிய நபரை கைது செய்யக்கோரி உறையூர் குழுமணி சாலையில் கோப்பு பாலத்தின் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருச்சி: ஜீயபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - 9 பேர் கைது

இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உரிய விசாரணை நடத்தி முக்கிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் 2 தரப்பினரை சேர்ந்த மேல குழுமணிபகுதியைச் சேர்ந்த திவாகர் (வயது 25), ராமர் (28), ஷாருக்கான் (25), அருண் குமார் (26), மணிவேல் (24), தியாகராஜன் (30), நரசிம்மன் (25), சசிகுமார் (19), ஆகாஷ் (20) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் மேலும், பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Embed widget