மேலும் அறிய

பாஜக நிர்வாகி சவுதாமணி பிணையில் விடுவிப்பு - திருச்சி நீதிபதி பாலாஜி உத்தரவு

பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி நீதிமன்ற காவலை நிராகரித்து பிணையில் விடுவிப்பு.

பாஜக ஊடகப் பேரவை சார்ந்த சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7 (மோடியின் குடும்பம்) என்ற X-தள கணக்கில், "மனது வலிக்கிறது, வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது....கஞ்சா...திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு" என்று பதிவிட்டு. அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள், சீருடையுடன் கையில் பாட்டிலில் மது போன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்று வீடியோ பதிவு உள்ளது. அவ்வீடியோ பதிவை. 04.03.2024-ம் தேதி மாலை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து, குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொது அமைதியை கெடுக்கும் விதமாகவும் மேற்படி வீடியோ மற்றும் பதிவு உள்ளதாகவும், ஏதோ உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பியும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற செய்தியை சமூக வலைத்தளங்கள். ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடுவது சட்டபடி குற்றம் எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மத்திய மாவட்ட தொழில் நுட்ப அணி அமைப்பாளர் A.K.அருண், திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் நேற்று முந்தினம் மாலை புகார் கொடுத்தார்.


பாஜக நிர்வாகி சவுதாமணி பிணையில் விடுவிப்பு - திருச்சி நீதிபதி பாலாஜி உத்தரவு

மேலும்  வீடியோவை @sowdhamani7 என்ற ID மூலமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். மேற்படி சவுதாமணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்.12/24 u/s 153, 504, 505 (1) (b) IPC, 66 E IT Act r/w 74, 77 JJ Act- r/w 74, 77 jj act படி அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக  கைது செய்யபட்ட நிலையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், விசாரணை மேற்கொண்டு சென்னையில் இருந்த சௌதாமணியை கைது செய்தார். மேலும் சவுதாமணி மீது இந்திய தண்டனைச் சட்டம் கலகம் செய்யத் தூண்டுதல்( 153 ) அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி பாலாஜி முன் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி சவுதாமணியின் நீதிமன்ற காவலை நிராகரித்து பிணையில் விடுவித்தார். மேலும் போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trichy Power Cut: திருச்சியில் நாளை (23-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (23-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் ரூ.2,600 கோடி நிலம்! 281 ஹெக்டேரில் சிப்காட் தொழிற்பூங்கா வருமா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுமா?
திருச்சியில் ரூ.2,600 கோடி நிலம்! 281 ஹெக்டேரில் சிப்காட் தொழிற்பூங்கா வருமா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுமா?
Power outage in Trichy district tomorrow (22.10.26): திருச்சி மாவட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் பாதிப்பு
Power outage in Trichy district tomorrow (22.10.26): திருச்சி மாவட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் பாதிப்பு
"எம்.ஜி.ஆர் காலம் முதலே கொலைகள் நடக்கிறது... திமுகதான் பெரிதுபடுத்துகின்றன"- வைகோ சர்ச்சை பேச்சு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget