மேலும் அறிய
Advertisement
Tasmac Shops: திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடல் - முழுவிபரம் இதோ
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நேற்று முதல் திருச்சி மாவட்டத்தில் 16 மதுபான கடைகள் மூடப்பட்டது.
தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து, அவற்றை ஜூன் 22-ம் தேதி நேற்று முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட 500 கடைகளும் இனிமேல் செயல்படாது என கூறப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாநகரில் 12 கடைகள், புறநகரில் 4 கடைகள் உள்பட மொத்தம் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவே மீதம் இருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சில கடைகளில் நேற்று காலை மதுபாட்டில்கள் அனைத்தும் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை தென்றல் நகர் (கடை எண்:10202), பாபு ரோடு (கடை எண்:10219), பெரிய கடைவீதி (கடை எண்:10249), கரூர் புறவழிச்சாலை பைபாஸ் ரோடு அண்ணாமலை நகர் (கடை எண்:10253), கல்கண்டார்கோட்டை தங்கேஸ்வரி நகர் வடக்கு (கடை எண்:10271), எடமலைப்பட்டிபுதூர் (கடை எண்:10314), வரகனேரி பிச்சை நகர் (கடை எண்:10513), மத்திய பேருந்து நிலையம் அருகில் மெக்டொனால்டுஸ் சாலை (கடை எண்:10522), தேவதானம் (கடை எண்:10559) மூடப்பட்டது.
மேலும் , உறையூர் கோணக்கரை ரோடு (கடை எண்:10536), திண்டுக்கல் பிதான சாலை கருமண்டபம் (கடை எண்:10302), காந்தி மார்க்கெட் (கடை எண்:10209) பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. இதுபோல் புறநகர் பகுதிகளில், திருவெறும்பூர் நவல்பட்டு சாலை (கடை எண்:10376), மணப்பாறை செவலூர் (கடை எண்:10325), கல்லக்குடி (கடை எண்:10337), பூவாளூர் கிழக்கு (கடை எண்:10510) பகுதியில் உள்ள கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை. பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களும், மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீதம் உள்ள கடைகளையும் படிப்படியாக அரசு குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion