இனி நிற்க வேண்டாம்.. கடை பணியாளர்களுக்கு இருக்கை - சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு
கடந்த 4ம் தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்டது
![இனி நிற்க வேண்டாம்.. கடை பணியாளர்களுக்கு இருக்கை - சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு TN government Decided to amend the law on sales staff can sit during duty இனி நிற்க வேண்டாம்.. கடை பணியாளர்களுக்கு இருக்கை - சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/06/370e416e37fe408ed69186040f135402_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அமர்ந்துகொண்டே வேலை பார்க்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்த விளக்கத்தில், ''தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுகின்றனர். அதனால் பல உடல்நலக் கேடுக உண்டாகிறது. தங்களது வேலை நேரம் முழுவதும் நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதப்படுகிறது.
கடந்த 4ம் தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது. எனவே அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது'' எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)