மேலும் அறிய

நெல்லை அருகே சுற்றுலா வந்த வடமாநிலத்தவர் வேன் மீது லாரி மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

விபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேரும், குழந்தை ஸ்ரீ யும்  பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை நோக்கி கீழ வல்லநாடு துணை மின் நிலையம் அருகே இன்று அதிகாலை வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது வேன் அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடத்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் பின்னால் மற்றொரு வேனில் வந்த நபர்கள் விபத்தில் வேன் சிக்கியதை பார்த்து பதறினர். மேலும் அதில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாமல் செய்வதறியாது பரிதவித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இது குறித்து  தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வயது குழந்தை உட்பட 16 பேரை காயங்களுடன் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தது. 

இதுகுறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து சுமார் 30 பேர் தென் தமிழகத்திற்கு ரயிலில் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்து அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து இரண்டு தனியார் வேனை வாடகை எடுத்து உள்ளனர். அதன் பின் அங்கிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான்  தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேரும், குழந்தை ஸ்ரீ யும்  பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து விபத்தில் இறந்த மூன்று பேரின் உடலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மாதிரிகளை சேகரித்து சென்றனர் இதற்கிடையில் உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது உடலை இங்கிருந்து எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற்கூறாய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற் கூறாய்வு செய்து உடலை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்துள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget