மேலும் அறிய

பணிகள் புறக்கணிப்பு... வருவாய்துறை சங்கங்கள் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் மாவட்டம் மற்றும் வட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தின. 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மதியம் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதனால் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. முகாமிற்கு வந்த மக்கள் இதனால் அவதியடைந்தனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, தஞ்சாவூர் மாவட்ட மையம் சார்பில், 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் மாவட்டம் மற்றும் வட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தின. 

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.

அனைத்து காலி பணியிடங்களையும் காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது, களப்பணியாளர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிப்பது போன்ற, நடவடிக்கைகளை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும். 

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பை ஏற்கனவே இருந்தது போல் 25 சதவீதமாக ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் வெளி முகமை, ஒப்பந்தம், தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 

இதேபோல் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயதுரை தலைமையில் வட்டாட்சியர் நிலை முதல் கிராம உதவியாளர்கள் வரை 27 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும், கோரிக்கைகளை வலியுறுத்தி  வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget