மேலும் அறிய

அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே... தஞ்சையை பரபரப்பாக்கியுள்ள தவெக போஸ்டர்

ஞ்சை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர்தான் தற்போது டாக் ஆப் த சிட்டியாக மாறியுள்ளது.

தஞ்சாவூர்: அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே என்று ஆரம்பிக்கும் வாசகங்களுடன் கூடிய தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.

தங்கள் கட்சி தலைவர் விஜய்க்கு ஊக்கமளிக்கும் வகையில் தவெக நிர்வாகிகள் தஞ்சை நகர் முழுவதும் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்கள் தான் தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது பலரும் கண்டன விமர்சனங்களை எழுப்பி உள்ளனர். இருப்பினும் ஆதரவு குரல்களும் ஓங்கி ஒலித்து வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்தது. திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் இதுபோலவே மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால் அங்கெல்லாம் ஏற்படாத இதுபோன்ற சம்பவம் கரூரில் மட்டும் நடந்தது எப்படி? இதன் பின்னணியில் சதி உள்ளது என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீசார்  தீவிரமாக உள்ளனர். இப்படி அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மீது கருப்பு புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இதுகுறித்து தனது மனவேதனையை தெரிவித்து விஜய் வீடியோவும் வெளியிட்டார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே. போர்க்களத்தில் இறங்கி விட்டோம் வெற்றி வாகை சூடுவதற்கு , உண்மை ஒருநாள் வெல்லும் என தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை மத்திய மாவட்ட தொழிலாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மாரி ஆகியோர் தஞ்சை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர்தான் தற்போது டாக் ஆப் த சிட்டியாக மாறியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget