மேலும் அறிய

‘ஓபிஎஸ் சொல்வது சரியான கருத்து; அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ - டிடிவி தினகரன்

ஓ.பி.எஸ். சொல்வது சரியான கருத்து. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்

 “சரியான கருத்து... ஓ.பி.எஸ். சொல்வது சரியான கருத்து. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவரவர். அவரவராக இணைந்து தி.மு‌.க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூருக்கு இன்று வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அது சரியான கருத்தாகும். அவரவர் அவரவராக இணைந்து தி.மு‌.க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம். நேற்று வரை நடந்ததை மறந்து விட்டு எல்லாம் நல்லவைக்கே, நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதை தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன்.

 


‘ஓபிஎஸ் சொல்வது சரியான கருத்து; அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ - டிடிவி தினகரன்

யாரும் யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலில் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம். அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழையதை நினைத்துக் கொண்டிருக்க கூடாது. அதை கெட்ட கனவாக மறந்து விட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கலாம்.

ஜெயக்குமார் தொடர்ந்து அரசியல் பற்றி தெரியாமல் பேசுகிறார். அவர் தெரிந்து பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என தெரியவில்லை. 8 வழி சாலை குறித்து கடந்த ஆட்சியின்போது தி.மு.க முதலில் ஆதரவு தெரிவித்து, பின்னர் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களைப் போல் அண்டர் பல்டி அடிப்பவர்கள் யாரும் கிடையாது. 8 வழி சாலை என்ன பெயரில் வந்தாலும் மக்களை பாதிக்கும் போது அதை நாங்கள் எதிர்ப்போம்.

 


‘ஓபிஎஸ் சொல்வது சரியான கருத்து; அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ - டிடிவி தினகரன்

கடந்த முறை கூட நாங்கள் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொது மக்களோடு சேர்ந்து போராடினோம். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு கொடுத்து தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். விமான நிலையம் வருவது வளர்ச்சிக்கு தான். ஆனால் அதே வேளையில் விமான நிலையத்திற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களது கோரிக்கையை கேட்க வேண்டும்.

மேகதாதுவில் அணை வந்தால் தமிழ்நாடு சோமாலியாவை போல் மாறிவிடும். மேகதாதுவில் அணையை கட்டும் கர்நாடக அரசின் முடிவை மத்திய ,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். பேராவூரணி மொய் விருந்து பாரம்பரியமாக நடக்க கூடியது. அதில் வரும் பண மூலம் வட்டியில்லா கடன் கொடுக்கப்படுகிறது.

அது தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து என்பதால் பேசப்படுகிறது. பாரம்பரியமாக நடக்கக் கூடிய மொய் விருந்து குறித்து எதுவும் தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். மத்திய அரசு தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றி வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget