மேலும் அறிய

வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு

பள்ளிக்கு அருகில் நூறு மீட்டர் தொலைவில் உள்ள இந்த மது கடை செயல்படுவது அரசின் சட்ட விதிகளுக்கு புறம்பானது. பல்வேறு விதத்திலும் மிகுந்த அவதிக்கு அனைத்து தரப்பினரும் உள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடன் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதி வணிக வளாகங்கள் , மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் பகுதியாகும். மேலும் திருமண மண்டபங்கள், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. திருவாரூர்,மன்னார்குடி , பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் போன்ற முக்கிய தலங்களுக்கு செல்லும் வழித்தடமாக இப்பகுதி உள்ளது.

வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இந்நிலையில்  இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு  100 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது வாங்கிக்கொண்டு அருகில் உள்ள திறந்தவெளியில் மத குடித்து விட்டு பொதுமக்கள்,பெண்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடிபோதையில் மது பிரியர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வணிகக் கடைகள் முன்பு மது பாட்டில் கலை உடைத்து செல்கின்றனர்.

பள்ளிக்கு அருகில் நூறு மீட்டர் தொலைவில் உள்ள இந்த மது கடை செயல்படுவது அரசின் சட்ட விதிகளுக்கு புறம்பானது. பல்வேறு விதத்திலும் மிகுந்த அவதிக்கு அனைத்து தரப்பினரும் உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை உடன் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார், தொல்காப்பியர் சதுக்க வட்டார தலைவர் ரமேஷ், செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விதிகளுக்கு புறம்பாக செயல்படும் பட்டாஸ்மாக் கடையை உடன் அப்புறப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வணிகர் சங்க நிர்வாகிகள் தேசிகன், சங்கர், கவுன்சிலர் செந்தில், முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், வார்டு செயலாளர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget