மேலும் அறிய

ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளர் இவர்தாங்க... முழுவிபரம் உள்ளே

அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மா.சேகர் ஒரத்தநாடு பேரூராட்சி தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்று சேர்மனாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு பிரித்து கொடுத்த நிலையில் மற்ற 5 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதில் 2 பேர் புதுமுகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளது. மற்ற 5 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாபநாசம் தொகுதியில் துரை.சண்முகபிரபு, திருவிடைமருதூர் தொகுதியில் இளமதி சுப்பிரமணியன், ஒரத்தநாடு தொகுதியில் மா.சேகர், பேராவூரணி தொகுதியில் கோவி.இளங்கோ, பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி. சேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பாபநாசம் துரை. சண்முகபிரபு மற்றும் பேராவூரணி கோவி. இளங்கோ ஆகியோர் புதுமுகங்கள்.

அதிமுக சார்பாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மா.சேகர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ,ஜானகி, ஜெயலலிதா ஆகியோருடன் கட்சி பணியாற்றியவர். பிஎஸ்சி பட்டதாரியான  இவருக்கு திருமங்கை என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் ஒரத்தநாடு பேரூராட்சி தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்று சேர்மனாக தொடர்ந்து இருந்து வருகிறார். அதிமுகவில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும், அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். 

பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக தற்பொழுது இருந்து வருகிறார். தற்போது இவர் அதிமுக ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை.சண்முகப்பிரபு முன்னாள் எம்எல்ஏ துரைக்கண்ணுவின் மகன். இவர் சட்டமன்ற தேர்தலில் புதுமுகமாக அறிமுகமாகிறார். திருவிடைமருதூர் தொகுதியில் இளமதி சுப்பிரமணியன், பேராவூரணி தொகுதியில் கோவி.இளங்கோ, பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி. சேகர் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget