மேலும் அறிய

திருவாரூர் : தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை..

திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிக்கியது.  மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலரிடம் தீவிர விசாரணை

திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து ரூ.20 ஆயிரம் சிக்கியது.  மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது
 
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்,  ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம், ஓசூர் போக்குவரத்து சோதனைச் சாவடி, நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகம், நாகை, திருவண்ணாமலை, திருவான்மியூர், அரியலூர், பெண்ணாடம், சிவகங்கை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்

திருவாரூர் : தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை..
இந்த நிலையில்  இன்று திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசனிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் இந்த அலுவலகத்தில் வெடி கடை மருத்துவமனை கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலகத்தில்தான் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் : தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை..
 
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதற்காக பல நபர்களிடமிருந்து பணம் வாங்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து இன்று இரவு 8 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் காவல் துறையினர் அதிரடியாக மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் புகுந்தனர்

திருவாரூர் : தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை..
 
இதனையடுத்து அந்த அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசனிடம் உரிய கணக்கில் வராத  ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. இந்தப் பணம்  யாரிடமிருந்து பெறப்பட்டது என தீயணைப்பு துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த விசாரணை இரவு வெகுநேரம் வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவாரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனை பரபரப்பினை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

பேராவூரணியில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்: 122 நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு!
பேராவூரணியில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்: 122 நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு!
கும்பகோணத்தில் 1,008 பேர் பங்கேற்ற பிரமாண்ட நாட்டியாஞ்சலி: கட்டைக்கால் அணிந்து பரதம் ஆடி சாதனை!
கும்பகோணத்தில் 1,008 பேர் பங்கேற்ற பிரமாண்ட நாட்டியாஞ்சலி: கட்டைக்கால் அணிந்து பரதம் ஆடி சாதனை!
நவராத்திரி ஸ்பெஷல்! தஞ்சை பூம்புகாரில் கண்கவர் கொலு பொம்மைகள் விற்பனை!
நவராத்திரி ஸ்பெஷல்! தஞ்சை பூம்புகாரில் கண்கவர் கொலு பொம்மைகள் விற்பனை!
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலைவாய்ப்பு! 10-ம் வகுப்பு + ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு... ரூ.63,200 வரை சம்பளம்!
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலைவாய்ப்பு! 10-ம் வகுப்பு + ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு... ரூ.63,200 வரை சம்பளம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold rate today : சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
Thirukkural Express: 2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
Tata EV BaaS: இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
Embed widget