மேலும் அறிய

பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார்.

பழுதடைந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை மாற்றி கொடுக்காத  நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் முருகானந்தம்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ரிக்கோ மிஷின் காப்பியர் பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார். இந்த இயந்திரத்தை டெலிவரி செய்வதற்கு ரூபாய் ஆயிரம் நிறுவனம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்திற்கு இரண்டு வருடம் உத்தரவாதம் இருந்த நிலையில் நான்கு மாதங்களில் இயந்திரம் பழுதாகி உள்ளது. இதனையடுத்து  பழுதான இயந்திரத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி எடுத்துச் சென்ற சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தினர் ஒரு வாரத்தில் சீர்செய்து கொடுத்து விடுவதாகவும் இல்லையென்றால் புதிய இயந்திரம் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அந்த நிறுவனம் நடந்து கொள்ளாத காரணத்தினால் முருகானந்தம் கடந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இந்த வழக்கில் இன்று வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முருகானந்தத்திற்கு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கிய தொகையான 46 ஆயிரத்து 500 மற்றும் டெலிவரி கட்டணம் ரூபாய் 1000 சேர்த்து 47 ஆயிரத்து 500 ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனவும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி வரை அவருக்கு ஏற்பட்ட வருமான இழப்பிற்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் 60 ஆயிரம் ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் மேலும்  மன உளைச்சல் மற்றும் பொருள் கஷ்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும் சேவை குறைபாட்டினால் தண்டனைக்குரிய சேதங்கள் ஏற்படுத்தியதற்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழக்கு செலவிற்கு பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 6 வார காலத்திற்குள்  வழங்க வேண்டும் என சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவன மேலாளர் மற்றும் சர்வீஸ் இஞ்சினியர் சரவணன் ஆகியோருக்கு உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்த தொகையினை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 சதவீத வருட வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சீதக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கூறும்பொழுது, '' எங்கள் பகுதியில் பள்ளிக்கூடம், கூட்டுறவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு செல்பவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்வதையடுத்து நான் புதியதாக ஜெராக்ஸ் மெஷின் வாங்கி தொழிலில் ஈடுபட்டு வந்தேன். ஜெராக்ஸ் மிஷின் வாங்கி ஆறு மாதங்களில் அது பழுதடைந்த நிலையில் பலமுறை மெஷின் வாங்கிய நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பல நாட்கள் கழித்து ஜெராக்ஸ் மிஷினை சரி செய்து தருவதாக எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அதை தரவும் இல்லை அது குறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தனர், அதனையடுத்து தான் வழக்கறிஞர் மூலமாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினேன். தற்பொழுது எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இனிவரும் காலங்களில் நுகர்வோரை யாரும் ஏமாற்ற கூடாது என்பதற்கு இது நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் பாதிக்கப்பட்ட முருகானந்தம் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut 14.07.2026:
Thanjavur power cut 14.07.2026: "திங்கட்கிழமை சார்ஜிங் திருவிழாங்கோ...... செவ்வாய்க்கிழமை தஞ்சையில் கரண்ட் லீவ்!"
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
செல்வ வளம் அருளும் செல்வ ராஜகணபதி... சம்வஸ்ராபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Embed widget