மேலும் அறிய

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி

இந்த டிரோனில் தட்பவெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக்கூடிய 3 டி பிரிண்டட் வசதியுடைய பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா இன்னோவேஷன் இகோசிஸ்டமில் இருந்து 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் முக்கிய கண்டுபிடிப்பாக தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை மிக விரைவாக எடுத்துச் செல்லும் ட்ரோன் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது

இந்த தயாரிப்புகளைத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் முன்னிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் அறிமுகம் செய்தார். இதில், தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான குறைந்த எடையுடைய டிரோன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் பசுக்களுக்கு பசியை ஏற்படுத்தி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளச் செய்து கூடுதலாக பால் சுரக்கும் விதமான மூலிகை மருந்து, கல்வி பயன்பாட்டுக்கான நடமாடும் ரோபோ, நரம்பியல் பரிசோதனைக்கான பேஸ் பி மென்பொருள், ஆறு அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பயோ மெட்ரிக் பாதுகாப்பு பெட்டகம், மனித ஆற்றலை பயன்படுத்த முடியாத இடங்களில் ஆயிரம் கிலோ எடை வரையிலான பொருள்களைச் சுமந்து செல்லக்கூடிய தானியங்கி ரோபோ உட்பட என மொத்தம் 9 சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூடுதல் இயக்குநர் சிவக்குமார், கமாண்டர் ஜெயகிருஷ்ண நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை எடுத்துச் செல்லும் மிக எடை குறைந்த ட்ரோன் செயல்பாடு குறித்து பல்கலைக்கழக முதன்மையர் (டீன்) (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
 
தற்போதைய காலக்கட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் உறுப்புகள், மருந்துகள், தடுப்பூசிகள், ரத்தப் பொருட்கள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தொலைதூரம் அல்லது அணுக முடியாத பகுதிகளில் விரைவாகவும், திறமையாகவும் வழங்க ட்ரோன்கள் மூலம் அனுப்பும் இந்த கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி

தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் சாலை வழியாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதை மிக விரைவாக தொடர்புடைய மருத்துவமனைக்கு அனுப்பி, நோயாளிக்கு உரிய நேரத்துக்குள் கிடைக்கும் விதமாக டிரோன் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டிரோனில் தட்பவெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக்கூடிய 3 டி பிரிண்டட் வசதியுடைய பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் சாதனமும் இணைக்கப்பட்டுள்ளதால் டிரோன் பெட்டி எங்கு பறக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

டிரோனில் தற்போதுள்ள பெட்டிகளின் எடை 20 கிலோ உள்ள நிலையில், இப்பெட்டி உடல் உறுப்புகளுடன் சேர்த்து 5 கிலோ எடையில் இருப்பது போல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிரோன் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் வேகமாக கடந்துவிடும். அதிகபட்சமாக 20 கி.மீ. வரை செல்லும். 5 கிலோ எடை அளவில் டிரோன் பெட்டியை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்தான் முதன்முதலில் கண்டுபிடித்து, அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget