மேலும் அறிய

முதல்வர் பிறந்தநாள்... மார்ச் மாதம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு

முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 2025-2026 நிதிநிலை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தி கட்சி கொடியேற்றுவது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்குவது என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர்  இறைவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் மற்றும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, புண்ணியமூர்த்தி ஆகியோர் பேசினர்.  

கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றியம் மற்றும் பேரூர் கழகங்களின் சார்பாக மார்ச் மாதம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் காதுகேளாதவர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி, முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 2025-2026 நிதிநிலை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தி கட்சி கொடியேற்றுவது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 2025-2026 ல் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜக அரசின் மதவாத ஆட்சியை வன்மையாக கண்டிப்பது.

பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி நிதியை வழங்காமல், தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை தடுக்கின்ற வகையில் செயல்படும் மத்திய, பாசிச பா.ஜ.க அரசை கண்டிப்பது. மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துக்கொள்வது, வெற்றியை தேடித்தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget