மேலும் அறிய

காகிதம் இல்லா ஆவணப் பதிவு! இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை

காகிதம் இல்லா ஆவண பதிவு குறித்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் பதிவுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் காகிதம் இல்லா ஆவண பதிவினை செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 22ம் தேதி பத்திர பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில் காகிதம் இல்ல ஆவண பதிவு, நேரடி வருகை இல்லா  ஆவண பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம்,  புலன வழி தகவல் தொடர்பு, கைபேசி செயலி, மைய கணினி வழி சான்றிதிட்ட நகல் வழங்குதல், க்யூ ஆர் கோடு பேமெண்ட், மேம்படுத்தப்பட்ட வில்லங்கச் சான்று வழங்குதல் ஆகிய சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதை பயன்படுத்தி பொதுமக்கள் இணைய வழியில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமல் சேவைகளையும் செய்து கொள்ளலாம்.  மேலும் முதல் மனைப்பிரிவு விற்பனை ஆவணங்கள் மற்றும் முதல் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்கள், ரசீது ஆவணங்கள், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணங்கள், விற்பனை உடன்படிக்கை ஆவணங்கள், v அடமான ஆவணங்கள், சுவாதீனத்துடன் கூடிய அடமான ஆவணங்கள், நம்பக ஆவணங்கள், குத்தகை உடன்படிக்கை ஆவணங்கள், சுவாதீனம் இல்லாத மேல் நடமான ஆவணங்கள், சுவாதீனத்துடன் கூடியர் மேல் அடமான ஆவணங்கள் ஆகிய சேவைகளும் நேரில் வராமல் செய்து கொள்ளலாம்.

மேலும் காகிதம் இல்லா ஆவண பதிவினை இடைவெளி உள்ளது கைப்பேசி வழி அனைத்து வகையான ஆவணங்களையும் பதிவு செய்து கொள்ளும் வசதியும் மற்றும் பல சேவைகளும் செயல்பாட்டில் உள்ளது. இதை பதிவு பொதுமக்கள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரியில் உள் நுழைந்து பயன்பெறலாம். எனவே இதனை பொதுமக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வழியில் பத்திர பதிவுத்துறை சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காகிதம் இல்லா ஆவண பதிவு என்பது ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அல்லது மின்னணு வடிவத்திலேயே உருவாக்கப்பட்டு, மைய களஞ்சியத்தில் சேமிக்கப்படுகின்றன. பயன்பாட்டு வசதி: வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே ஆவணப் பதிவு, நேரடி வருகை இல்லா (faceless) வசதி, மற்றும் தானியங்கி பத்திர உருவாக்க வசதிகள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் வேகம்: காகிதப் பயன்பாடு குறைவதால் ஆவணங்கள் தொலைந்து போவது தவிர்க்கப்படுகிறது. டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் க்யூ.ஆர். கோடு (QR Code) மூலம் பணம் செலுத்தும் வசதி, செயல்முறையை வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது.

தேவையற்ற காகிதக் கோப்புகளைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் ஆவணங்களை விரைவாகத் தேடி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருவாரூரில் போலீசார் அதிரடி வேட்டை! 15 ரவுடிகள் உள்பட 38 பேர் கைது – 8 அரிவாள்கள் பறிமுதல்!
திருவாரூரில் போலீசார் அதிரடி வேட்டை! 15 ரவுடிகள் உள்பட 38 பேர் கைது – 8 அரிவாள்கள் பறிமுதல்!
பயிர்க் காப்பீடு செய்ய டிச.15 வரை அவகாசம் வேண்டும்! குத்தகை விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க கோரிக்கை!
பயிர்க் காப்பீடு செய்ய டிச.15 வரை அவகாசம் வேண்டும்! குத்தகை விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க கோரிக்கை!
திருவாரூரில் புதிய விதை பரிசோதனை நிலையம்! டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரி அதிரடி உத்தரவு!
திருவாரூரில் புதிய விதை பரிசோதனை நிலையம்! டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரி அதிரடி உத்தரவு!
குழந்தைகள் காப்பகத்திலேயே கொடூரம்! 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை
குழந்தைகள் காப்பகத்திலேயே கொடூரம்! 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
Embed widget