மேலும் அறிய

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் - நாகையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி மின்சார கட்டணத்தை அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

நாகையில் அங்கன்வாடி மின் கட்டணங்களை பணியாளர்கள் தலையில் சுமத்தாமல் அரசு செலுத்த வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி சீருடை அணிந்தபடி ஆட்சியர் அலுவகம் முன்பாக தரையில் அமர்ந்தும் முற்றுகையிட்டும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளின் நலன் கருதி வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை 1205 முழுமையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு மின்கட்டனம் அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய கோரிக்கை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் - நாகையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அதன் ஒருபகுதியாக நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாநில பொருளாளர் தேவமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீருடையோடு வந்த அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்தும் முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மின்சார கட்டணத்தை அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி மின்சார கட்டணத்தை அரசே கட்ட வேண்டும் எனவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்குவதோடு பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும் குறு மையத்தை பிரத மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், கீழையூர், திருமருகள் ஒன்றியங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget