மேலும் அறிய

Ponmudi ED Raid: அமலாக்கத்துறைக்கு ‘வாஷிங் மெஷின்’ என பெயரிட வேண்டும் - தருமபுரி எம்பி

அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும். ஊழல் செய்தவராக இருந்தாலும் அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு பிஜேபியில் இணைந்தால், அவர்கள் புனித புனிதராகி விடுவார்கள்-தருமபுரி எம்பி பேட்டி.

சீன தூதரகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்துவதற்கான அகன்ற தொடுதிரை தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. இதில்  மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பள்ளிகளுக்கும், தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஏழு பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்கான அகன்ற தொடுதிரை கொண்ட தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல் ஆண்கள் நிலைப்பள்ளி மற்றும் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளுக்கான தொடுதுறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். 
 
இதனை தொடர்ந்து மாணவர்களிடம் எம்பி செந்தில்குமார் உரையாடினார். அப்பொழுது கோலுண்றி, உயரம் தாண்டுதல் போட்டியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், அந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு தேவையான மெத்தை இல்லை. அதை வாங்கி தர வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோலூன்றி உயரம் தாண்டுதல் பயிற்சி மேற்கொள்வதற்கு தேவையான மெத்தையை, தனது சொந்த செலவில் வாங்கி தருவதாக எம்பி செந்தில்குமார் உறுதி அளித்தார். 
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி செந்தில் குமார்,
 
கடந்த சில நாட்களாக ஒன்றிய பாஜக அரசு 24 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணை விடாமல் தடுத்து, நீர்த்து போகச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை அடிபணிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். இதுவரை அமலாக்கத்துறை 500-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் வெறும் 120 வழக்குகள் மட்டுமே தண்டனைக்கு கொண்டு வந்துள்ளனர். 
 
இந்த ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தற்பொழுது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. ஒருவர் மீது எந்த ஒரு புகாரும் இல்லை என்றாலும் கூட, சோதனை நடத்தலாம் அதன் பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். தற்பொழுது தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த அமலாக்க துறைக்கு வாஷிங் மெஷின் என பெயர் சூட்டலாம். ஏனென்றால் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் கூட, அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு பாஜகவில் சேர்ந்தால், அவர்கள் புனிதராவார். எவ்வளவு ஊழல் செய்தவர்களை கூட அமலாக்கத்துறை தூய்மைப்படுத்தி விடுமாம். அதன் பிறகு பாஜகவில் இணைகின்ற போது  மஹாராஷ்டிராவில் துணை முதலமைச்சர்பதவி வழங்கியது போல், பல்வேறு பதவிகள் கிடைக்கிறது. இதெல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்திய நடத்தப்பட்டு வருகிறது. 
 
ஆனால், திமுகவை பொறுத்தவரை சட்டத்துறை மிகவும் வலிமையானது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம். ஏற்கனவே உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இது எல்லாமே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சிதைக்கும் நோக்கில் பாஜக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூட மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் இருக்கிறார். இல்லையென்றால் அவரை டெல்லிக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டு இருந்தனர். அப்போழுது  வேறு மாதிரியான நடவடிக்கைகள் இருந்திருக்கும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு இந்த மாதிரியான திட்டங்களையே பாஜக அரசு கடைபிடித்து வருகிறது. ஆனால் திராவிட சித்தாந்தம் உள்ளவர்களிடம் அவர்களால் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது.
 
ஓபிஎஸ், தினகரன் இருவரையும் பாஜக எவ்வாறு இயக்குகிறது என்பதை பொறுத்து அவர்களின் அணி செயல்பாடு இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் அவரது ஆளுமையை வெளிப்படுத்தி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு பாஜகவினர் திட்டமிடுகின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். ஆகையால் அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு தயக்கம் காட்டி வருகிறது என எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget