உலக சுற்றுலா தினம்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27: சுற்றுலா என்பது நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பல்வேறு பின்னணியில் உள்ள மக்களிடையே கலாச்சார தொடர்புகளை வளர்க்கும் ஒரு முக்கிய துறையாகும். உலக சுற்றுலா தினம் என்பது பரிமாற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச புரிதலை மேம்படுத்துவதில் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை கொண்டாடும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.
பொருளாதார சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது
UNWTO ஆல் 1980 இல் நிறுவப்பட்ட உலக சுற்றுலா தினம், சுற்றுலாவின் உலகளாவிய தாக்கத்தை கொண்டாடுகிறது மற்றும் அதன் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் " சுற்றுலா மற்றும் அமைதி ", சுற்றுலா மற்றும் உலக அமைதிக்கான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.
கலாச்சார இடைவெளிகளை குறைக்கிறது
உலக சுற்றுலா தினம் என்பது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், இது கலாச்சார இடைவெளிகளைக் குறைப்பதில், பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில், பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலிலும் சுற்றுலாவின் பங்கைக் கொண்டாடுகிறது. உலக சுற்றுலா தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி
அந்த வகையில் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தஞ்சாவூர் சுற்றுலா என்ற தலைப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரிய சின்னங்கள், கோவில்கள், கைவினைப் பொருட்கள், கிராமிய கலைகள் என பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.
முதல் மூன்று பரிசுகளை பெற்ற மாணவர்கள்
இதில் தஞ்சாவூர் தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ரா பாத்திமா முதல் பரிசும், தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவஸ்ரீ இரண்டாம் பரிசும் மார்னிங் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாய் சரண் மூன்றாம் பரிசும் பெற்றனர். முன்னதாக நடைபெற்ற கோல போட்டியில் தஞ்சாவூர் ஸ்ரீதேவி முதல் பரிசும், கருப்பூர் யுவஸ்ரீ இரண்டாம் பரிசும் தஞ்சாவூர் சாந்தி மூன்றாம் பரிசு பெற்றனர்.
இந்த பரிசுகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமா ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், நிர்வாக அலுவலர் குருமூர்த்தி கணக்கு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.