மேலும் அறிய

இளைய சமுதாயத்தினர் போதைக்கு எதிராக உறுதியேற்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம்

சித்த மருத்துவத்தில் காட்டப்பட்டுள்ள உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி போதை பழக்கத்தில் இருந்து இளைய சமுதாயத்தினர் வெளிவர வேண்டும் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற சங்க நிர்வாகிகள், போதைக்கு எதிராக சங்கரய்யாவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர். 


இளைய சமுதாயத்தினர் போதைக்கு எதிராக உறுதியேற்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம்

அப்போது சங்க நிர்வாகிகளிடம் சங்கரய்யா கூறுகையில், "பிற பிரச்னைகளை விட மிக முக்கியமான பிரச்னை போதைப் பழக்கம்தான். மத தலங்களிலும் போதையின் தீமை குறித்துப் போதிக்க வேண்டும். கிராமப்புற கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கூறுகையில்,  "பெருநகரம் தொடங்கி கிராமப்புறம் வரை குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருள் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சந்தைக் களமாக இந்தியா இருப்பது வருந்தத்தக்கது.


இளைய சமுதாயத்தினர் போதைக்கு எதிராக உறுதியேற்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம்

இதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்தவில்லை. இதனாலேயே குஜராத் மாநிலத்தில் இருக்கும் அதானி துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 11 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு மதுக்கடைகளின் நேரத்தைக் குறைத்து திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்கும் வகையில் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும்.


இளைய சமுதாயத்தினர் போதைக்கு எதிராக உறுதியேற்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம்

சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருபோதை மீட்பு மையம் உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்தைப் பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு கொடுக்கப்படும்" என தெரிவித்தனர். மேலும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிகுமார் ஆகியோர் போதை ஒழிப்புக்காகக் கையெழுத்திட்டனர். இதேபோன்று இதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கையெழுத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்தார். இதுபோன்று  பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


இளைய சமுதாயத்தினர் போதைக்கு எதிராக உறுதியேற்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம்

இந்நிலையில் மயிலாடுதுறையில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்திய மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையிலான வாலிபர் சங்கத்தினர் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்து கையெழுத்து பெற்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறுகையில், "போதையினால் ஏற்படும் தீமைகளை திருவள்ளுவர், அருணகிரிநாதர் உள்ளிட்ட நமது முன்னோர்கள் முழுமையாக விளக்கியுள்ளார்கள். 


இளைய சமுதாயத்தினர் போதைக்கு எதிராக உறுதியேற்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம்

மணிமேகலை, 11-ஆம் திருமுறை ஆகிய நூல்களிலும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இன்றைய இளைய சமுதாயத்தினர் மதுப்பழக்கத்துக்கு மட்டும் உள்ளாகி இருந்தால் அவர்களை மீட்டெடுத்து விடலாம். ஆனால் அவர்கள் உண்ணும் உணவு முதல், போதை மிட்டாய், போதை ஊசி போன்ற பயங்கர போதை பழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் நரம்பு தளர்ச்சி, மலட்டு தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதனை சித்த மருத்துவத்தில் காட்டப்பட்டுள்ள உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி போதை பழக்கத்தில் இருந்து இளைய சமுதாயத்தினர் வெளிவர வேண்டும். அனைவரும் போதைக்கு எதிராக உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கணும்...இல்லைன்னா கடும் நடவடிக்கை
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கணும்...இல்லைன்னா கடும் நடவடிக்கை
தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடிக்குது! 28 பேர் வேட்புமனு தாக்கல்: பாஜக வேட்பாளர் யார்?
தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடிக்குது! 28 பேர் வேட்புமனு தாக்கல்: பாஜக வேட்பாளர் யார்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Today: என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
“இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TOYOTA SUV MPV Sales: SUV-ல நாங்க தான் கெத்து.! விற்பனை விர்ர்ர்.! சந்தையை கதறவிடும் டொயோட்டா இன்னோவா, ஃபார்ச்சூனர்
SUV-ல நாங்க தான் கெத்து.! விற்பனை விர்ர்ர்.! சந்தையை கதறவிடும் டொயோட்டா இன்னோவா, ஃபார்ச்சூனர்
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
Embed widget