மேலும் அறிய

மயிலாடுதுறை: அரசு பேருந்தை இயக்கிய எம்எல்ஏ - அசந்து போன பொதுமக்கள்...!

மயிலாடுதுறை அருகே புதிய வழிதடத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்து  10 கி.மீ, தூரம் அரசு பேருந்தை ஓட்டி பொதுமக்களை ஏற்றிச் சென்ற மயிலாடுதுறை எம்.எல்.ஏ செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் வானாதி ராஜபுரம், அஞ்சளாறு, சோழம்பேட்டை  உள்ளிட்ட கிராமங்களில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், கூலி வேலைக்கு வெளியூர் செல்வோர், அன்றாட இதர பணிகளுக்காக செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தங்கள் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நகரத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்  ராஜகுமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

மயிலாடுதுறை: அரசு பேருந்தை இயக்கிய எம்எல்ஏ - அசந்து போன பொதுமக்கள்...!

இதனை அடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற   ராஜகுமார் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்து சேவையை ஏற்படுத்தி தந்தார். மயிலாடுதுறையில் இருந்து ஜங்ஷன், மாப்படுகை, சோழம்பேட்டை, அஞ்சார்வார்த்தலை, குத்தாலம், திருவாலங்காடு வழியாக ஆடுதுறைக்கு புதிய வழிதடத்தில் பெண்களுக்கு கட்டணம் இல்லாம அரசு டவுன் பஸ் போக்குவரத்து தொடக்க விழா மாப்படுகையில் நடைபெற்றது. 

மயிலாடுதுறை: அரசு பேருந்தை இயக்கிய எம்எல்ஏ - அசந்து போன பொதுமக்கள்...!

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ராஜகுமார் கலந்து கொண்டு கொடியசைத்து அரசு பேருந்து போக்குவரத்தை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து அரசு பேருந்தில் ஏறிய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கினார். பின்னர் மாப்படுகையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் குத்தாலம் வரை செல்லும் வழிகளில் பயணிகளை பேருந்தில் ஏற்றி இறக்கி சென்றார். இந்நிகழ்வு கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஆச்சரியத்தை வரவேற்பையும் ஏற்படுத்தியது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

வழக்கமாக புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு பேருந்தை இயக்க தெரியும் பட்சத்தில்  சில அடி தூரம் வரை பேருந்தை இயக்குவது வழக்கம். அதேபோன்றுதான் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கியதும் பலரும் இவர் சில அடிகள் வரை ஓட்டி செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக, 10 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறி பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பொதுமக்களை பேருந்தில் ஏற்றி இறக்கிய நிகழ்வு  பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை: அரசு பேருந்தை இயக்கிய எம்எல்ஏ - அசந்து போன பொதுமக்கள்...!

இதுகுறித்து பேருந்து வசதி கிடைத்த கிராம மக்கள் கூறுகையில், பல ஆண்டு காலமாக எங்கள் கிராமங்களில் பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை செவி கொடுத்து கேட்டு தற்போது மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பகுதிக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget