மேலும் அறிய

கிராமசபை கூட்டம் தீர்மானங்கள் எல்லாம் சும்மா கண்துடைப்பு நாடகம் - மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் ஆதங்கம்

சாலை  சரி செய்யவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் - கிராம மக்கள் எச்சரிக்கை

மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் குண்டு குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்துதர வலியுறுத்தி அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் உள்ள ஆறு வார்டு பகுதிகளிலும் கிராமப்புறங்களுக்கு செல்லும் தார்சாலைகள் குண்டும் குழியுமாகவும், கப்பிகற்கள் பெயர்ந்தும் செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது. இதனால் நாள்தோறும் அன்றாட தேவைகளுக்கு வெளியில் செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  சாலை சரி இல்லாததால் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்தது அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

கிராமசபை கூட்டம் தீர்மானங்கள் எல்லாம் சும்மா கண்துடைப்பு நாடகம் - மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் ஆதங்கம்

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் சாலைகள் சரி செய்து தரப்படும், புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் ஊராட்சி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் இதனால் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோடங்குடி நெடுமருதூர் செல்லும் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை வழிமறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

World Photography Day 2023: இன்று உலக புகைப்பட தினம்… வரலாறு என்ன? ஏன் கொண்டாடுகிறோம்? இந்த ஆண்டு தீம் இதுதான்!

கிராமசபை கூட்டம் தீர்மானங்கள் எல்லாம் சும்மா கண்துடைப்பு நாடகம் - மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் ஆதங்கம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில்  சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை  சரி செய்யவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர், பேராவூரணியில் சமுதாய வளைகாப்பு விழா
தஞ்சாவூர், பேராவூரணியில் சமுதாய வளைகாப்பு விழா
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
ரூ.5 கோடி லஞ்சப் புகார் எதிரொலி: தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சுகுமாறன் அதிரடி சஸ்பெண்ட்! சிபிசிஐடி விசாரணை தீவிரம்
ரூ.5 கோடி லஞ்சப் புகார் எதிரொலி: தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சுகுமாறன் அதிரடி சஸ்பெண்ட்! சிபிசிஐடி விசாரணை தீவிரம்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget