மேலும் அறிய

தென்னை மகசூல் மேம்பாட்டுக்கு வழிகாட்டி: விவசாயிகளுக்கு உதவும் ஆலோசனை!

தென்னையில் ஒல்லிக்காய் உற்பத்திக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் பாரம்பரிய குணம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மற்றும் மரகத சேர்க்கை குறைபாடு போன்றவை முக்கியமானவை

தஞ்சாவூர்: தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற தேவையான உர பரிந்துரைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.

தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை ஒல்லிக்காய்கள் ஏற்படுகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது. ஒல்லிக்காய்கள் என்பவை காய்களின் பருமன் குறைந்து, சிறுத்து நீளமாகவும், உள்ளே பருப்பற்றும் கொட்டாங்கச்சியுடனே அல்லது வெறும் உரிமட்டையுடனே காணப்படும். சில சமயங்களில் கொட்டாங்கச்சி வெடித்து பருப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் பூசணங்களால் தாக்கப்பட்டு கருப்பாக காணப்படும். இதனை வைப்பாலை தேரைக்காய் எனவும் அழைக்கின்றனர்.

தென்னையில் ஒல்லிக்காய் உற்பத்திக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் பாரம்பரிய குணம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மற்றும் மரகத சேர்க்கை குறைபாடு போன்றவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சரிவர பராமரிக்கப்படாத தோப்புகளிலும், மானாவாரி தோப்புகளிலும் ஒல்லிக்காய்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகின்றது. இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுவதன் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்களை குறைத்து அதிக விளைச்சல் பெறலாம். பாரம்பரிய குணம் வழியில் ஒல்லிக்காய்கள் ஏற்படுவதை தவிர்க்க நல்ல குணங்கள் அடங்கிய தாய் மரங்களில் இருந்து அதாவது 15 முதல் 45 வயது உடையதும் 35 மட்டைகளுக்கு குறைவில்லாததும் தொடர்ச்சியான விளைச்சலாக ஆண்டு ஒன்றுக்கு 100 காய்கள் கொடுக்க வல்லதும், பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லாத மரங்களில் இருந்து 12 மாதம் முதிர்ச்சி அடைந்த தென்னை நெற்றுக்களை தேர்வு செய்து அதிலிருந்து நாற்றுக்களை தயார் செய்ய வேண்டும்.

பின்னர் அவைகளிலிருந்து கீழ்க்கண்ட குணங்களை உடைய நாற்றுக்களையே தேர்வு செய்ய வேண்டும். நாற்றுகளின் வயது 9 முதல் 12 மாதம். அதிக வேர்களை உடைய கன்றுகள். கன்றுகளின் கழுத்து பகுதி அதிக பருமன் உடையவை. ஐந்து முதல் ஏழு இலைகள் உடையவை. விரைவில் ஓலை பிரிப்பவை. பூச்சி நோய் தாக்கப்படாதவை. தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை மண்ணில் அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் ஒல்லிக்காய்களை தவிர்க்கலாம்.

நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றுக்கு 540 கிராம் தழைச்சத்து, 260 கிராம் மணி சத்து, 820 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதனை ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களின் மூலம் ஈடுகட்ட வேண்டும். மேலும் சோடியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, தாமிரம் மற்றும் போரான் போன்ற ஊட்டச்சத்துக்களும் தென்னை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனை ஈடு செய்ய தென்னைக்கான நுண்ணூட்டக் கலவைகளை வளர்ந்த தென்னைக்கு ஒரு கிலோ என்ற அளவில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இட வேண்டும். மேலும் இயற்கை எருவாகிய மக்கிய சாணம், கம்போஸ்ட், கோழி எரு, மக்கிய ஆலை மற்றும் தென்னை நாற்கழிவுகளை இடலாம். இவை தவிர பசுந்தாள் உர பயிர்களான சணப்பு, கொளுஞ்சி கலப்பகோனியம் போன்றவற்றை தென்னையின் ஊடே விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் வளம் காத்திடலாம். இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் தோன்றக்கூடிய ஒல்லிக்காய்கள் வெகுவாக குறைக்கப்படுகின்றன.

தேங்காயின் பருப்பு உற்பத்திக்கும், அதன் வளர்ச்சிக்கும் சாம்பல் சத்தும், வெண்காரம் எனப்படும் போரான் சத்தும் தேவைப்படுகின்றன. இவற்றின் பற்றாக்குறையினால் காய்களில் வெடிப்பு ஏற்பட்டு பருப்பு வளர்ச்சி தடைபடுகிறது. இதனை தவிர்க்க தென்னைக்கு பரிந்துரை செய்யப்படும் மக்கிய சாண எரு அல்லது பசுந்தாள் உரம் 50 கிலோ. யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்போர்ட் 2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ இவைகளுடன் ஒரு கிலோ கூடுதல் பொட்டாஷ் மற்றும் 2 கிராம் வெண்காரத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இடுவதன் மூலம் ஒல்லிக்காய்கள் குறைந்து விளைச்சல் அதிகரிப்பதுடன் தரமான கொப்பரைகள் கிடைக்கின்றன.

சில விவசாயிகள் தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்டுள்ள அடர்த்திக்கும் அதிகமாக அடிக்கடி வேர் மூலம் உட்செலுத்துவதாலும் ஒல்லிக்காய்கள் தோன்ற வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தென்னையில் மகரந்த சேர்க்கை குறைந்து ஒல்லிக்காய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேர் மூலம் மருந்து உட்செலுத்தும் போது பரிந்துரை செய்யப்படுகின்ற பூச்சி மற்றும் பூசண மருந்துகளை சரியான அடர்த்தி மற்றும் இடைவெளியில் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறாக தரமான தென்னங்கன்று, சரிவிகித பயிர் உணவு, ஒருங்கிணைந்த உரம் மேம்பாடு மற்றும் பூச்சி, நோய் மேம்பாட்டின் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்கள் உற்பத்தியை குறைத்து அதிக விளைச்சல் பெற்று, மண்வளத்தையும் காத்திடலாம்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
தஞ்சையில் வேல் கொண்டு சூரனை வதம் செய்த முருகப்பெருமான்! விண்ணதிர்ந்த அரோகரா கோஷம்!
தஞ்சையில் வேல் கொண்டு சூரனை வதம் செய்த முருகப்பெருமான்! விண்ணதிர்ந்த அரோகரா கோஷம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Embed widget