மேலும் அறிய

காவிரி படுகையில் புதைக்கப்படும் ராட்சத எரிவாயு குழாய்கள் - இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷனுக்கு எதிராக மனு

எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச் செல்லத்தான் வேண்டும் என்றால், அதை கடலில் குழாய் அமைத்து படுகையை பாதிக்காத வகையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்

காவிரிப்படுகையில் எரிவாயு குழாய் பதிப்புகளைத் தடுத்து நிறுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு அளித்துள்ளார். 

காவிரி படுகையில் புதைக்கப்படும் ராட்சத எரிவாயு குழாய்கள் - இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷனுக்கு எதிராக மனு

அம்மனுவில் எண்ணூர் - தூத்துக்குடி எரிவாயுக் குழாய் பதிப்பு திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்சமயம் மயிலாடுதுறை வட்டம் நீடூர் அருகே வை.பட்டவர்த்தி கிராமத்தில் கிராமமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் ராட்சத குழாய்களைக் கொண்டு வந்து அந்நிறுவனம் இறக்கியுள்ளது. இதேபோல், செம்பனார்கோயில் அருகே கடலி - திருவிளையாட்டத்திலும் ஐஓசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான குழாய்கள் கொண்டு வந்து அடுக்கப்பட்டுள்ளன.  

காவிரி படுகையில் புதைக்கப்படும் ராட்சத எரிவாயு குழாய்கள் - இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷனுக்கு எதிராக மனு

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதியன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சட்ட பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எண்ணூர் - தூத்துக்குடி எரிவாயுக் குழாய்ப் பதிப்புத் திட்டம் என்பது இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போதுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று காவிரிப்படுகை சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இங்கே எண்ணெய் - எரிவாயுக் குழாய்களை அமைப்பது சட்டத்திற்குப் புறம்பானதாகும். வயல்களின் ஊடாக குழாய் அமைப்பது காவிரிப்படுகையின் வேளாண்மையை முற்றிலுமாக பாதிக்கும். 

காவிரி படுகையில் புதைக்கப்படும் ராட்சத எரிவாயு குழாய்கள் - இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷனுக்கு எதிராக மனு

2017 ஆம்  ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் இத்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். அப்போதும் கூட இங்கு நிலம் ஏதும் கையகப்படுத்தப்பட்டு குழாய் பதிக்கப்படவில்லை. இப்போது குழாய் பதிப்பு என்பது வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆகவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்திற்குப் புறம்பான எந்த பணியும் இங்கே நடத்த அனுமதிக்கக்கூடாது. எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச் செல்லத்தான் வேண்டும் என்றால், அதை கடலில் குழாய் அமைத்து படுகையை பாதிக்காத வகையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம். 

காவிரி படுகையில் புதைக்கப்படும் ராட்சத எரிவாயு குழாய்கள் - இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷனுக்கு எதிராக மனு

வை.பட்டவர்த்தியில் கொண்டுவந்து வைத்திருக்கக்கூடிய ராட்சச குழாய்களை மக்களுடைய கருத்துக்கு  மதிப்பளித்து உடனடியாக அப்புறப்படுத்தி காவிரிப்படுகைக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஓ.ஷேக்அலாவுதீன், மாவட்ட பொருளாளர் பி.எம்.பாஷித், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு.மகேசு, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அ.பைசல் ரஹ்மான், விசிக ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் நவாஸ் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget