மேலும் அறிய

மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! - சீர் செய்து தர கோரிக்கை

பழையார் மீன்பிடி துறைமுக மீன் ஏலக்கூடம் மற்றும்  மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கும்  பழுதாகி விலையுயர்ந்த மீன்களை சேமிக்க முடியாமல் கிடைக்கும் விலை விற்பனை செய்வதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 350 விசைப்படகு, மற்றும் 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! - சீர் செய்து தர கோரிக்கை

இதன்மூலம் இந்த மீன்பிடி துறைமுகத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இத்துறைமுகத்தில்  இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் உலர் கருவாடு ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பழையாறு துறைமுகத்தில் உள்ள மீன் ஏலக்கூடம் சிறுக சிறுக  பழுதடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு அமைக்கபட்டுள்ள 8 டன் கொள்ளளவு கொண்ட மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு முற்றிலும் சிதைந்து பயனற்று கிடக்கிறது. 


மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! - சீர் செய்து தர கோரிக்கை

இதனால் ஒவ்வொரு மீனவரும் தனியாக மீன்களை பதப்படுத்த சாதாரண பிளாஸ்டிக் பெட்டிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விலையுயர்ந்த மீன்களை கூட சேமித்து வைக்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு உடனே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் ஏலக்கூடம் பராமரிப்பு இல்லாததால் துறைமுக வளாகத்திலேயே மீன்களை ஏலம் விட்டு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத சூழலுக்கு தள்ளளப்பட்டுள்ளதாகவும் இதனை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பழையாறு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தை சீரமைத்தும் புதிய  மீன் சேமிப்பு குளிர்சாதன கிடங்கு அமைத்து தர வேண்டு எனவும் அப்பகுதி மீனவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! - சீர் செய்து தர கோரிக்கை

மேலும் இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், மழை புயல் வெள்ளம் என இயற்கை சீற்றம் எது ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தான் என்றும், அதுவும் மழை வெள்ள காலங்களில் கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்,  அதுபோன்று ஆண்டுக்கு இரண்டு மாதகாலம் மீன்பிடி தடை காலம் என வருடத்தில் ஆறு மாத காலங்கள் மட்டுமே தாங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் படிக்க வைத்து உருவாக்க வேண்டும் என்றும்.


மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! - சீர் செய்து தர கோரிக்கை

அதற்காக தாங்கள் கடலில் சென்று பிடித்து வரும் மீன்களை உரிய முறையில் பதப்படுத்தி வைத்திருந்து விற்பனை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தை காக்க முடியும் எனவும் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் ஏல கூடத்தையும் அதில் அமைந்துள்ள குளிர்சாதன கிடங்கையும் சீரமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிரடி முடிவு: திருவையாறில் சுயேட்சையாக களமிறங்குகிறாரா கவிஞர் சினேகன்?
அதிரடி முடிவு: திருவையாறில் சுயேட்சையாக களமிறங்குகிறாரா கவிஞர் சினேகன்?
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
தஞ்சாவூர் வயல்களில் வாத்து மேய்ச்சல்: இயற்கை உரம், அதிக லாபம் தரும் தொழில்! விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் வயல்களில் வாத்து மேய்ச்சல்: இயற்கை உரம், அதிக லாபம் தரும் தொழில்! விவசாயிகள் மகிழ்ச்சி
குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது... தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது... தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NDA Seat Sharing: பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
Russia Crude Oil Import: சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
IPL 2026: பிரமாண்ட வெற்றினா இதுதான்..! CSKவிற்கு இடமில்லை - RCBக்கு வந்த சோதனை - யார் டாப்?
IPL 2026: பிரமாண்ட வெற்றினா இதுதான்..! CSKவிற்கு இடமில்லை - RCBக்கு வந்த சோதனை - யார் டாப்?
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
Embed widget