மேலும் அறிய

தேர்தல் பகை... தவெக நிர்வாகியை வெட்டிய திமுக நிர்வாகி தலைமறைவு

கடந்த சில நாட்களுக்கு த.வெ.க.,வுக்கு ஓட்டு கேட்கக்கூடாது என வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தகராறு செய்து ரஜினி தாக்கியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பூண்டியில், த.வெ.க., நிர்வாகியை அரிவாளால் வெட்டிய தி.மு.க., நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த தவெக நிர்வாகி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (42) .  இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை இணை செயலாளராக உள்ளார்.  இவரது உறவினர் ரஜினி, தி.மு.க., கிளை நிர்வாகியாக உள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு த.வெ.க.,வுக்கு ஓட்டு கேட்கக்கூடாது என வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தகராறு செய்து ரஜினி தாக்கியுள்ளார். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசில் வேலாயுதம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம், வாக்குச்சாவடியில் இருந்த போது, ரஜினி மீண்டும் வேலாயுத்திடம் தகராறு செய்து விட்டு, வீட்டில் இருந்த வேலாயுதம் மனைவி காஞ்சனாவை தாக்க முயன்றார். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். 

பிறகு, நேற்றுமுன்தினம் இரவு  ஓட்டுப்பதிவு முடிந்து வேலாயுதம் வீட்டிற்கு சென்ற போது, அவரை ரஜினி வழிமறித்துள்ளார். தொடர்ந்து விசில் சின்னத்திற்கு அதிக ஓட்டுகள் வந்தால் நீ தான் காரணம், எனக் கூறி வேலாயுதத்தை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த வேலாயுதம் மனைவி காஞ்சனாவையும் ரஜினி காதில் வெட்டி விட்டு, தப்பியோடிவிட்டார்.  

இதில் படுகாயமடைந்த வேலாயுதம், காஞ்சனா இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேலாயுதம், அவரது மனைவி காஞ்சனா இருவரையும், த.வெ.க., மத்திய மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான விஜய்சரவணன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் சரவணன் வலியுறுத்தி உள்ளார்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget