மேலும் அறிய

பொறியாளர்கள் கவனத்திற்கு... உங்களுக்கான சூப்பர் வேலை வாய்ப்பு!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா (Engineers India) நிறுவனத்தில் அனுபவமுள்ள பொறியாளர் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர்: இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் 64 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொறியாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணீடாதீங்க.

மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் பல்வேறு பதவிகளில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுபமுள்ள நிபுணர்களுக்கான பிரிவில் 22 காலிப்பணியிடங்களும், ஒப்பந்த அடிப்படையில் அனுபவமுள்ள பொறியாளர்களுக்கான பிரிவில் 42 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா (Engineers India) நிறுவனத்தில் அனுபவமுள்ள பொறியாளர் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 64 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி, தகுதிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சீனியர் மேனேஜர், மேனேஜர், டெபியூட்டி மேனேஜர், இணை பொறியாளர்: காலிப்பணியிடங்கள் 64, இணையதளம் https://engineersindia.com/

இணை பொறியாளர் கிரேடு III (சிவில்) 8
மெக்கானிக்கல் 10
வெல்டிங் 7
எலெக்ட்ரிக்கல் 6
இன்ஸ்ரூமெண்டேஷன் 3
இணை பொறியாளர் கிரேடு IV (சிவில்) 2
மெக்கானிக்கல் 4
வெல்டிங் 1
எலெக்ட்ரிக்கல் 1

நிபுணர்களுக்கான காலிப்பணியிடங்கள்

உதவி பொது மேலாளர் 5
மூத்த மேலாளர் 3
மேலாளர் 8
துணை மேலாளர் 5

இணை பொறியாளர் பதவிக்கு அதிகபடியாக கிரேடு 3 பதவிகளுக்கு 41 வயது வரையும், கிரேடு 4 பதவிகளுக்கு 45 வயது வரையும் இருக்கலாம். அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் B.E./ B. Tech./ BSc (Engg) ஆகிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 முதல் அதிகபடியாக 13 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவி பொது மேலாளர் பதவிக்கு 44 வயது வரை இருக்கலாம். மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மூத்த மேலாளர் பதவிகளுக்கு 40 வயது வரை இருக்கலாம். மேலாளர் பதவிக்கு 36 வயது வரை இருக்கலாம். துணை மேலாளர் பதவிக்கு 32 வயது வரை இருக்கலாம். இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

இணை பொறியாளர் கிரேடு 3 பதவிக்கு ரூ.86,400 முதல் ரூ.96,000 வரை சம்பளம் வழங்கப்படும். இணை பொறியாளர் கிரேடு 4 பதவிக்கு ரூ.1,00,800 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி பொது மேலாளர் பதவிக்கு ரூ.1,00,000 - 2,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். மூத்த மேலாளர் பதவிக்கு ரூ.90,000 - ரூ.2,40,000 வரையும், மேலாளர் பதவிக்கு ரூ.80,000 - ரூ.2,20,000 வரையும் சம்பளம் வழங்கப்படும். துணை மேலாளர் பதவிக்கு ரூ.70,000 - 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

இணை பொறியாளர் கிரேடு 3 மற்றும் 4 பணியிடங்களுக்கு 2026 ஜனவரி 12, 13, 19, 21, 23, 24 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும். குருகிராம், ஹரியானாவில் நேர்காணல் நடைபெறும். விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பது அவசியமாகும். இதரப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இன்ஜினியர்ஸ் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு https://recruitment.eil.co.in/ என்ற நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக வேண்டும்.

இணை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025. இதரப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 02.01.2026. நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். அனுபவமுள்ள பொறியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget