மேலும் அறிய

தஞ்சாவூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவேற்றம் தொடக்கம்

தஞ்சாவூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவேற்றம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவேற்றம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய திமுக இத்திட்டம் குறித்து நீண்ட நாள்களாக ஆலோசனையில் இருந்தது. 

இதையடுத்து, இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி அன்று செயல்படுத்தப்படும் என 2023-24 பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த திட்டத்தின் செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். 

ஆண்டு வருமானம், நில உரிமை போன்ற பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பம் அளிக்க சிறப்பு முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறப்பு முகாம்களை ரேசன் கடைகள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வீடு தேடி வந்து விண்ணப்பங்கள் வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருப்பவர்களுக்கு, கார் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது. மேலும், அரசு அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பிகள் உள்ளிட்டோருக்கும் இது வழங்கப்படாது. ஒரு ரேசன் அட்டையில் 'தகுதி வாய்ந்த' பல குடும்ப தலைவிகள் இருந்தாலும், அதில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். 

குடும்ப தலைவராக ஒரு ஆண் இருந்தால், அவரின் மனைவிக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, திருமணமாகாத இல்லதரசிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இது பயனளிக்கும். எனவே ரேசன் அட்டை உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவேற்ற முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அனைத்து வட்டங்களிலும் முதல் கட்ட விண்ணப்பப் பதிவேற்ற முகாம் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை 850 நியாய விலைக்கடைகளில் உள்ள 3 லட்சத்து 72 ஆயிரத்து 506 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவேற்ற முகாம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை 333 நியாய விலைக் கடைகளிலுள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்களுக்கும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூர் மேலவீதி கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, தெற்கு வீதி, செங்கிப்பட்டி அருகே டி. பி. சானிட்டோரியம், அயோத்திப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற விண்ணப்பப் பதிவேற்ற பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget