பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், முதலீட்டுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பலருக்கு அரசின் கடன் திட்டங்கள் உதவியாக அமையக்கூடும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு கடன் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், டாம்கோ (TAMCO) மற்றும் டாப்செட்கோ (TABCEDCO) மூலம் கடன் உதவி பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்துள்ளார்.
சுயதொழில் தொடங்க விரும்புவோர், சிறு தொழில் மேற்கொண்டு வருபவர்கள், தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் உள்ளிட்ட தகுதியுடையவர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள் நடக்கும் இடங்கள்
மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகின்றன.
08.10.2026 – பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.
09.10.2026 – தஞ்சாவூர்: தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.
இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வசதிக்கு ஏற்ப அருகிலுள்ள முகாமில் கலந்து கொண்டு கடன் தொடர்பான தகவல்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
எந்தெந்த கடன்கள் கிடைக்கும்?
டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, தனிநபர் கடன், சிறுதொழில் கடன் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உள்ளிட்ட திட்டங்களுக்கான மனுக்கள் முகாம்களில் பெறப்படுகின்றன.
கடன் பெற விரும்புபவர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் மறக்காதீங்க!
சிறப்பு முகாமில் கடன் பெற விண்ணப்பிக்க வருபவர்கள் தேவையான ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்
சாதிச்சான்று
ஆதார் அட்டை
குடும்ப அட்டை
வருமானச் சான்று
இருப்பிடச் சான்று
தொழில் குறித்த விவரங்கள்
திட்ட அறிக்கை
கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள்
ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கும் வாய்ப்பு
சிறுபான்மையின மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி மாற்றுச் சான்று, Bonafide Certificate, கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, அசல் செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறவிடாதீங்க... பயன்படுத்திக்கோங்க!
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், முதலீட்டுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பலருக்கு அரசின் கடன் திட்டங்கள் உதவியாக அமையக்கூடும். இதனை கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரேவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
முகாம் தேதி, இடம், நேரத்தை சரியாக கவனித்து, தேவையான ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு வழங்கும் இந்த வாய்ப்பை தகுதியுடைய பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, சுயதொழில் மற்றும் சிறுதொழில் வாய்ப்புகள் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















