கொரோனா விதிமீறல் அபராதம்.. 4 நாட்களில் ரூ.2.77 கோடி வசூல்..
தமிழ்நாட்டில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது. அது, கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. மேலும், முகக்கவசம் அணியாமல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதி வரை முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாவதர்களிடம் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாதது மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 1.36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.