Watch Video: "கண்டிப்பா இருக்கு ஆக்ஷன்..." : ட்விட்டர் புகாருக்கு போலீஸ் கொடுத்த ரியாக்ஷன்.. கதறிய TTF வாசன்..
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு டி.டி.எஃப் வாசன் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு டி.டி.எஃப் வாசன் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கோவையை மையமாகக் கொண்ட டி.டி.எஃப் வாசன் முதன் முதலில் ட்வின் தொட்டலர்ஸ் எனும் யூட்டூப் சேனலை 2020ல் தொடங்கினார். அப்போது அவருக்கு இருந்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 200-க்கும் குறைவு தான். பின்னர் தனது யூட்டூப் சேனலினை மேம்படுத்த தனது பயண வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதுவும் தான் பைக்கில் பயணித்து வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக இதற்கு 20k கிட்ஸ் முதல் பைக்கில் உலகினைச் சுற்ற ஆசையோடு இருக்கும் அனைவரிடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது.
இதனால் அடுத்த ஒரு சில மாதங்களில் இவரது யூட்டூப் சேனலின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 20 லட்சங்களைக் கடந்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இவரது வீடியோக்களால் இவரது யூட்டூப் சேனலினை 2.74 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
அவரது சப்ஸ்கிரைபர்களில் பலர் தற்போது அவரது ரசிகர்களாகவும் மாறியுள்ளனர். கடந்த வாரத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பிறந்த நாள் என்பதால் கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினர். இவருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளம் உருவாக முக்கிய காரணமே அவரது பைக் ஸ்டண்டுகள்தான். அப்படி இருக்க இவரது பை ஸ்டண்டுகளைப் பார்த்து மற்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் முயற்சி செய்து விபத்துக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக டிவிட்டரில் ஒருவர், மாநகர சென்னை காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகர சென்னை காவல் துறையின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் கவனத்தில் கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
அந்த புகாரில், டிடிஎஃப் வாசன் பைக்கில் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதை தனது யூட்டூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை மேற்கோள் காட்டி புகார் எழுப்பப்பட்டுள்ளதால், டிடிஎஃப் வாசன் தற்போது நோட்டேட் லிஸ்ட்டில் உள்ளார் என தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு டிடிஎப் வாசன் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”ஹாய் டிடிஎப், எல்லாரும் எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். நான் கொஞ்சம் வருத்தத்தில்தான் இருக்கேன். நம்ம யார் வம்பு தும்புக்கும் போறது இல்ல. ஆனா திடீர்ன்னு என்னன்னு தெரியல நம்ம பக்கம் எல்லாமே திரும்புது. காரணம் என்னனு ஒன்னுமே புரியல.
நான் யாரையும் இன்ஸ்பயர் பண்ணணும்ன்னு நினைக்கல. நான் ஸ்டண்ட் பண்ணுவேன். ஒரு பைக்கரா எனக்கு எல்லாமே தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசை. நான் ஸ்டண்ட் பண்ணது எல்லாமே ப்ரைவேட் இடத்துலதான். அதேமாதிரி நான் ஹை- ஸ்பீட்ல போறேன்னு சொல்றாங்க. 247 கிமீ வாகனத்த ஓட்டியதா சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் போடுறாங்க. ஆனா நான் தமிழ்நாட்டில் அந்த வேகத்தில் ஓட்டல. வட இந்தியாவின் சாலைகளில் பைக்கின் திறனை கண்டறியவே ஓட்டுனேன்.
தமிழ்நாட்டில் என்னை போன்றவர்களை மதிக்க மாட்டிகுறாங்க. அதுக்கு மிதிக்கவும் இல்ல. மிதிக்காமலும் இல்ல. வட இந்தியாவில் எங்களை போன்றோருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்