Annapoorni Arasu | ”காவி கட்டிக்கிட்டு வேஷம் போடுறாங்க..எனக்கு பிடிச்சிருக்கு அலங்காரம் பண்ணிக்கிறேன்” - அன்னபூரணி
காவி வேட்டி கட்டிக்கொண்டு ருத்ராட்சம் அணிவது ஆன்மீகம் அல்ல, வேஷம் என்றும், நான் எதற்காகவும் நடிக்கவில்லை என்றும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களாக அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் பெண் சாமியார் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், அவரது பழைய வீடியோக்களும், புதிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், திடீரென பெண் சாமியார் அவதாரம் ஆதிபராசக்தியின் அவதாரம் தான்தான் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அன்னபூர்ணி தனியார் யூ டியூப் தளமான Behindwoods நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“என்னை யாரும் குட்டிச்சுவராக்க ஆக்க முடியாது. நான் பிறந்தது முதலே மகிழ்ச்சியாகத்தான் உள்ளேன். என்னை உணர்ந்த என் குழந்தைகளையும் கொண்டாட்டத்தின் உச்சத்தில்தான் வைத்துள்ளேன். என்னை யாராலும் கஷ்டப்படுத்த முடியாது. காவல்துறை என்னை தேடுகிறது என்பது வதந்தி.
நான் எதற்கு ஓடி மறைய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நான் தவறு செய்தால்தானே ஓடி மறைய வேண்டும். என்னை எது வழிநடத்துகிறதோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இங்குதானே இருக்கிறேன். காவல்துறைக்கு அழைப்பு விடுத்து என்னை பிடித்துக்கொடுங்கள்.
இதற்கு முன்பு எந்த வழக்குகளும் பதிவாகவில்லை. இந்த வதந்திகள் மூலம் பொதுமக்களின் மனதில் எந்தளவு அழுக்குகள் உள்ளது என்பது தெரிகிறது. இதனால், பொதுமக்களுக்காக இனி நிகழ்ச்சிகள் நடத்தப்போவதில்லை. என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்தப்போகிறேன். பொதுமக்களுக்கு நடத்துவதாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை நடத்தமாட்டேன்.
மூன்று வருடங்கள் நான் தலைமறைவாக வாழவில்லை. பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். நான் எந்த சாமியார் வேடமும் போடவில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆடம்பரமும், வசதியாகதான் நான் வளர்ந்தேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. இது மதங்களுக்கு அப்பாற்பட்டது. எந்த மதங்களையும் நான் இழிவுபடுத்தவில்லை. யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை. நான் எதற்காகவும் நடிக்கவில்லை. இது நடிப்பில்லை. எனக்கு பிடித்திருப்பதால் அலங்காரம் செய்துள்ளேன். காவியை கட்டிக்கொண்டு ருத்ராட்சம் அணிந்து வேடமிடுவது ஆன்மீகம் அல்ல. அது வேஷம்."
இவ்வாறு அவர் கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்