திண்டிவனம் அருகே சோகம்.. வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை பலி...
வீட்டின் வாசலில் விளையடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை சுட தண்ணீரில் விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்: திண்டிவனத்தில் வீட்டின் வாசலில் விளையடிக்கொண்டிருந்த 2.12 வயது ஆண் குழந்தை சுட தண்ணீரில் விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுடு தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (33) இவரது மனைவி வசந்தி (30) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் வசந்தி தனது இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீடான ஊரல் கிராமத்திற்கு சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி இரவு வசந்தி வீட்டின் வாசலில் விறகு அடுப்பில் சுடு தண்ணீர் வைத்து உள்ளார்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தை மகேஸ்வரன் பின்பக்கமாக செல்லும் போது தவறுதலாக சுடு தண்ணீரில் விழுந்தது கதறி அழுதான்,
தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை
இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
உயிரிழப்பு
இந்நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.