எவர்சில்வர் குடத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன்.. இப்படி மீட்ட தீயணைப்புத்துறை.. என்ன ஆச்சு தெரியுமா?
விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே எவர்சில்வர் குடத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்டெடுத்த தீயணைப்பு துறையினர்
விழுப்புரம் :திருவெண்ணைநல்லூர் அருகே சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது தவளைக்குள் குதித்து மாட்டிக்கொண்டதையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயனைப்பு வீரர்கள் கட்டர்கொண்டு தவளை கட்செய்து சிறுவனை மீட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பெரியசெவலை புது காலனி பகுதியை சேர்ந்த செல்வம் - பாக்கியலட்சுமி தம்பதியின் 3 வயது மகன் யஸ்வந்த் அவனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான்.
Annamalai As Actor : நடிகராக அவதாரம் எடுத்த அண்ணாமலை ! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அப்போது வீட்டில் வைத்திருந்த காலி தவளைக்குள் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக தவளைக்குள் இரு கால்களும் மாட்டிக்கொண்டது. இதனால் வெளியே வர முடியாமல் பயந்துபோன சிறுவன் யஸ்வந்த் அழுதுள்ளான். மகன் அழுகை சத்தம் கேட்டு வந்த பெற்றோர்கள் தவளைக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தாய் பாக்கியலட்சுமி தவளை உடன் மகனை ஆட்டோ மூலம் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையான தீயணைப்பு வீரர்கள் ஸ்டீல் கட்டர், ஆஷா பிளேடு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தவளையை கட் செய்து சிறுவனை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அச்சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு தாய் பாக்கியலட்சுமி கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தார். சாதுரியமாக தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறார்
இதுகுறித்து தீயணைப்பு துறையினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையான தீயணைப்பு வீரர்கள் ஸ்டீல் கட்டர், ஆஷா பிளேடு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தவளையை கட் செய்து சிறுவனை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்கள் குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்