மேலும் அறிய

பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி

விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவரும், நடிகருமானவர் விஜயகாந்த். கடந்தாண்டு காலமான இவரது 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டது. 

மயக்கமடைந்த விஜயகாந்த் மகன்:

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனும் தொண்டர்களைச் சந்தித்தனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசலில் விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகபாண்டியன் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விஜயகாந்த் சிலை திறப்பு:

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது சிலை திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திட்டமிட்டபடி இன்று காலை விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டது. வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளும் விஜயகாந்த் தொண்டர்களைச் சந்திப்பது வழக்கம்.

அவர் கடந்தாண்டு காலமாகியதால் அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் காலை முதலே தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தொண்டர்கள் மத்தியில் சிக்கிய சண்முக பாண்டியன் மயக்கம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படைத்தலைவன்:

கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் படம் மூலமாக அறிமுகமான சண்முகபாண்டியன் மதுர வீரன் படத்தில் நடித்தார். தற்போது அவர் படைத்தலைவன் படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மறைவிற்கு பிறகு கொண்டாடப்படும் அவரது முதல் பிறந்தநாள் என்பதால்  தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது தொண்டர்கள் இந்த பிறந்தநாளை உணர்ச்சிவசத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் காலை முதலே அவரது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினர். மேலும், பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Hector Hawk Vs Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
Embed widget